திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

தியேட்டரில் பலிக்காத பாச்சா.. ஓடிடியில் கெத்து காட்டிய திரிஷா

Actress Trisha: இந்த 2023 ஆம் ஆண்டு திரிஷாவுக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது என்று சொல்லலாம். அதுவும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக தனது சிறந்த நடிப்பை திரிஷா வெளிப்படுத்தியிருந்தார். அதன் பிறகு அவரது மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது.

இதைத்தொடர்ந்து விஜய்யின் லியோ படத்தில் நடித்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகு எவர்கிரீன் ஜோடியான திரிஷா மற்றும் விஜய் இணைந்து நடித்தது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்து இருந்தது. இதற்கு அடுத்தபடியாக இப்போது விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் அருண் வசீகரன் இயக்கத்தில் தி ரோடு என்ற படத்தில் திரிஷா நடித்திருந்த நிலையில் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்த படம் எதிர்பார்த்த அளவு போகாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்திருந்தது.

Also Read : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.. திரிஷாவுக்கு பல்பு கொடுத்த தி ரோட்

இதையடுத்து தியேட்டரில் வெளியாகும் படங்கள் குறிப்பிட்ட நாளில் ஓடிடியிலும் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தி ரோடு படமும் ஆஹா ஓட்டிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. தியேட்டரில் திரிஷாவின் பாச்சா பலிக்கவில்லை என்றாலும் ஓடிடியில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

அதாவது இந்த படம் வெளியான ஒரே நாளில் 25 மில்லியன் காட்சி பெற்றுள்ளது என்ற சாதனையை திரிஷா படைத்திருக்கிறார். இதன் மூலம் தியேட்டரில் நல்ல லாபத்தை கொடுக்கவில்லை என்றாலும் தி ரோடு படம் ஓடிடி நிறுவனத்திற்கு பெரும் தொகையை பெற்று தந்திருக்கிறது. இப்போதும் இந்த படத்தை த்ரிஷா ரசிகர்கள் அதிகம் ஓடிடியில் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : விஜய், திரிஷா கிட்ட இருந்து இத கத்துக்கோங்க பாஸ்.. உச்சாணி கொம்பில் இருப்பதன் காரணம்

Trending News