வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்ட த்ரிஷா.. விஜய் படத்தால் வந்த மறுவாழ்வு

Actress Trisha: ஒரு குறிப்பிட்ட வயது வந்து விட்டாலே அந்த நடிகைக்கு வாய்ப்புகள் என்பது எட்டாக்கனியாக மாறிவிடும். ஆனால் 20 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயினாக இருக்கும் த்ரிஷாவுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சிகிட்டு தான் கொட்டி வருகிறது. அதனாலேயே 40 வயதிலும் இவர் கெத்து காட்டி வருகிறார்.

அப்படிப்பட்ட இவரை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கி வைத்த சம்பவமும் நடந்திருக்கிறது. அதன் காரணமாகவே இவர் சினிமாவுக்கு கும்பிடு போடலாம் என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார். அதாவது மௌனம் பேசியதே படத்தை தொடர்ந்து இவர் நடித்த சாமி மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது.

Also read: அப்பாவின் மேல் இருக்கும் கோபத்தை படத்தில் காட்டிய விஜய்.. தளபதி நடிப்பை மோசமாக விளாசிய இயக்குனர்

ஆனால் அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18 போன்ற படங்கள் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அதனாலேயே இவரை தங்கள் படங்களில் புக் செய்வதற்கு பல தயாரிப்பாளர்களும் தயங்கி இருக்கிறார்கள். ஆனாலும் விஜய் இவரை நம்பி தனக்கு ஜோடியாக்கி இருக்கிறார்.

அப்படி இவர்களின் கூட்டணியில் வெளிவந்த படம் தான் கில்லி. தாறுமாறு வெற்றி பெற்ற இப்படத்தை தொடர்ந்து த்ரிஷாவுக்கும் நல்ல நேரம் ஆரம்பித்தது. பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய இந்த படத்திற்கு பிறகு விஜய், சூர்யா, அஜித் போன்ற நடிகர்களுடன் இவர் அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

Also read: பத்தல பத்தல போல் சர்ச்சையை கிளப்பிய விஜய்யின் நா ரெடி.. சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் பாடல்

அதேபோன்று தெலுங்கிலும் இவருக்கான வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அப்படி இவர் நடித்த பல படங்கள் இவருக்கான அடையாளமாக இன்று வரை இருக்கிறது. அது மட்டும் இன்றி கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் லியோ படத்தின் மூலம் இவர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார்.

அதனாலேயே இவர்களுடைய கெமிஸ்ட்ரியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் விஜய்யால் கிடைத்த மறுவாழ்வை கெட்டியாக பிடித்துக் கொண்ட திரிஷா இப்போது இளம் நடிகைகள் எல்லாம் பொறாமை கொள்ளும் அளவுக்கு விருட்சமாக வளர்ந்து நிற்கிறார்.

Also read: சொதப்பிய நெல்சன், சம்பவம் செய்ய போகும் லோகேஷ்.. லியோவில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Trending News