கல்யாணத்துக்கு ஓகே, ஆனா ஒரு கண்டிஷன்.. மாப்பிள்ளை விஷயத்தில் செக் வைத்த திரிஷா

trisha-cinemapettai
trisha-cinemapettai

திரிஷா கிட்டத்தட்ட இருபதாண்டு காலமாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். சில ஹீரோயின்கள் ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் அடுத்தடுத்த காலகட்டங்களில் அவர்களுடைய மார்க்கெட் சரிந்து காணாமல் போவதுதான் சினிமாவின் வழக்கம்.

ஆனால் சில நடிகைகளுக்கு மட்டும் அப்படி நடப்பதில்லை. வயது ஏறிக்கொண்டு போனாலும் அவர்களுடைய மார்க்கெட்டுக்கு எந்த ஒரு குறையும் வராதபடி பார்த்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் திரிஷா.

ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் சாமி, கில்லி போன்ற மாஸ் கமர்ஷியல் படங்களில் நாயகியாக உருவெடுத்த பின்னாளில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வரத்தொடங்கினார்.

தற்சமயம் கமர்சியல் படங்களை ஓரம் கட்டிவிட்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இடையில் திரிஷாவும் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக ஆசைப்பட்டு வருண் மணியன் என்ற தொழிலதிபரை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.

அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். பின்னர் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த திரிஷா சமீபகாலமாக எந்த ஒரு புதுப் படத்திலும் கமிட் ஆகவில்லை என்ற செய்தி கோலிவுட் வட்டாரங்களில் காதைக் கடித்தது.

அது ஏன்? என்று விசாரிக்கையில் தான் திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பல வருடமாக தன் வீட்டில் உள்ளவர்களிடம் தொழிலதிபர் மாப்பிள்ளைதான் வேண்டும் என கண்டிசன் போட்டிருந்தாராம். அச்சமயம் ஒரு தொழிலதிபர் திருமணத்திற்கு ரெடியாக திரிஷாவும் ஓகே சொல்லிவிட்டாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்.

trisha-cinemapettai
trisha-cinemapettai
Advertisement Amazon Prime Banner