திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வருமான வரியில் சிக்கிய திரிஷாவின் ஒரு கோடி வைர நெக்லஸ்.. எங்க அப்பன் குதிரைக்குள்ள இல்லைன்னு மாட்டிய ஹீரோ

Actress Trisha :  திரிஷா இப்போது தான் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து பட்டையை கிளப்பி வருகிறார். லியோ படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்த நிலையில் அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் திரிஷா வீட்டில் ரைட் நடந்துள்ளதாக அதில் வைர நகை சிக்கி இருந்துள்ளதாக பத்திரிக்கையாளர் பாண்டியன் ஒரு யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்திருந்தார். எப்போதுமே அரசியல் பிரபலங்கள் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது வழக்கம் தான்.

அவர் திரிஷா வீட்டில் சோதனை நடத்திய போது கணக்கில் வராத பணம் மற்றும் நகை ஆகியவை கிடைத்திருக்கிறது. குறிப்பாக ஒரு கோடி மதிப்பிலான வைர நெக்லஸ் ஒன்று வருமானத்துறையினரால் த்ரிஷா வீட்டில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான கணக்கு த்ரிஷாவிடம் இல்லாததால் யார் கொடுத்தது என்ற கேள்வி வைக்கப்பட்டுள்ளது.

Also Read : திரிஷா நயன்தாராவை ஓவர் டேக் பண்ணும் நடிகை.. லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு வரும் குழாயடி சண்டை

அப்போது நடிகர் விஜய் இதை தனக்கு பரிசாக அளித்ததாக திரிஷா கூறியதாக பத்திரிக்கையாளர் பாண்டியன் கூறியிருக்கிறார். ஏற்கனவே விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பிரிந்து இருப்பதாக ஒரு செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் லியோ படத்தில் திரிஷா நடித்தது தான் என்று கூறப்பட்டது.

இந்த சூழலில் பத்திரிக்கையாளர் பாண்டியன் திரிஷாவுக்கு இன்னும் நிறைய பரிசுகளை விஜய் கொடுத்திருக்கிறார் என கூறியிருக்கிறார். எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல தான் ஏற்கனவே பிரச்சனை கொழுந்து விட்டு எறியும் நிலையில் இந்த சம்பவம் இன்னும் பற்ற வைத்துள்ளது.

Also Read : விடாமுயற்சியில் அஜித், திரிஷாவின் கேரக்டர் பெயர்.. சர்ப்ரைஸ் தரப்போகும் 3 எழுத்து

Trending News