புதன்கிழமை, ஜனவரி 22, 2025

படப்பிடிப்பில் முற்றிய சண்டை.. விடாமுயற்சிக்கு பேக்கப் சொன்ன திரிஷா

Trisha : விடாமுயற்சி படம் தொடங்கியதில் இருந்து அஜித்துக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறது. ரசிகர்கள் எப்போது இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தீபாவளிக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இப்போது தீபாவளிக்கு ரிலீசாகுமா என்பதை சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் ஒரு பிரச்சனை நடந்துள்ளது. அதாவது இப்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார் திரிஷா. அவருடைய காட்சிகள் படமாக்கப்படுவதற்காக அஜர்பைஜானில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை எடுக்கும்போது இயக்குனர் மகிழ்திருமேணி மற்றும் திரிஷா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை முக்கிய நிலையில் அங்கிருந்த திரிஷா பேக்கப் சொல்லிவிட்டு உடனடியாக கிளம்பி விட்டாராம்.

விடாமுயற்சி படப்பிடிப்பில் திரிஷாவுக்கு ஏற்பட்ட மனஸ்தாபம்

ஏற்கனவே விடாமுயற்சி படத்தில் திரிஷா மற்றும் மகழ்திருமேனி இடையே கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. இந்த சூழலில் மீண்டும் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளதால் திரிஷாவை சமாதானப்படுத்தி தான் மீண்டும் படப்பிடிப்புக்கு வரவைக்க வேண்டுமாம்.

ஒரு புறம் விடாமுயற்சி படம் இருக்க, அஜித் காலதாமதம் ஆகுவதால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். போற போக்கை பார்த்தால் விடாமுயற்சி படத்திற்கு முன்னதாகவே குட் பேட் அக்லி படம் வெளியாகிவிடும் போல.

லைக்கா நிறுவனம் இந்தியன் 2 படத்தால் அதிருப்தியில் உள்ள நிலையில் அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் செய்து கல்லாகட்டி விட வேண்டும் என்ற அமைப்பில் செயல்பட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் விடாமுயற்சி தாமதம் லைக்காவிற்கு பாதகமாக அமைந்துள்ளது.

ரீ என்ட்ரியில் கலக்கும் திரிஷா

Trending News