ரோடு படத்தில் தெரியவந்த திரிஷாவின் உண்மை கேரக்டர்.. லோக்கல் கவுன்சிலரை அலறவிட்ட குந்தவை

Trisha: நேற்றிலிருந்து திரிஷாவின் விஷயங்கள்தான் சோசியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்து வருகிறது. சேலம் ADMK ஒன்றிய செயலாளர் ஏவி ராஜு திரிஷாவை பற்றி அவதூறாக பேசிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக த்ரிஷா கண்டனம் தெரிவித்து சட்டரீதியாக இதை அணுகுவேன் என்று கூறியிருந்தார்.

அத்துடன் த்ரிஷாவுக்கு சில பிரபலங்கள் சப்போர்ட் செய்து வந்து நிலையில், கட்சி செயலாளர் போட்ட வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டு விட்டார். இருந்தாலும் வாய் இருக்குன்னு யார் வேணாலும் என்ன வேணாலும் பேச முடியுமா என்ன. பேசியதெல்லாம் பேசிவிட்டு கடைசியில் மன்னிப்பு கேட்டுவிட்டா எல்லாம் சரியாகிவிடுமா? அதனால் திரிஷா இந்த குற்றச்சாட்டுக்கு கண்டிப்பாக பதிலடி கொடுத்து ஆக வேண்டும்.

இதனை தொடர்ந்து ரோடு படத்தின் இயக்குனர் திரிஷாவை பற்றி ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார். அதாவது கடந்த வருடம் அருண் வசிகரன் இயக்கத்தில் க்ரைம் திரில்லர் படமாக தி ரோடு வெளிவந்தது. அப்பொழுது சூட்டிங் ஸ்பாட்டில் த்ரிஷா, லோக்கல் கவுன்சிலரே அலற விட்டிருக்கிறார். அதாவது படப்பிடிப்புக்காக அனைவரும் மதுரைக்கு போயிருக்கிறார்கள்.

Also read: மாட்டிக்கிட்டியே பங்கு, பிளேட்டை மாற்றி போட்ட அரசியல்வாதி.. கூவத்தூர் த்ரிஷா சர்ச்சைக்கு வைத்த முற்றுப்புள்ளி

அங்கே த்ரிஷா சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிந்ததும் லோக்கல் கவுன்சிலர் திரிஷாவை பார்த்து போட்டோ எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காக சாயங்காலம் கவுன்சிலர், கும்பலுடன் சூட்டிங் ஸ்பாட்டிற்கு போய் இருக்கிறார். திரிஷாவை பார்ப்பதற்காக ஒரு நாள் முழுவதும் காத்திருந்திருக்கிறார். பிறகு படத்தின் இயக்குனர் திரிஷாவிடம், மேடம் அவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள்.

ஒரு போட்டோ எடுக்கணும்னு ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க என்று சொல்லி இருக்கிறார். அதற்கு த்ரிஷா அரசியல்வாதி உடன் போட்டோ எடுத்தால் அதை மிஸ் யூஸ் பண்ணி விடுவார்கள். அவர்கள் கூட எப்பொழுதுமே டச் வச்சுக்கிடவே கூடாது என்று சொல்லி விலகி இருக்கிறார். அதற்கு ஒரு போட்டோ தான மேடம் எடுக்கலாமே என்று கூறிய பொழுதும் த்ரிஷா வேண்டவே வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.

அப்படிப்பட்ட த்ரிஷா கண்டிப்பாக கூவத்திற்கு போயிருக்க மாட்டார். இது முற்றிலும் த்ரிஷா உடைய இமேஜை காலி பண்ணுவதற்கு அவர்கள் செய்யும் வேலை தான் என்று இப்படத்தின் இயக்குனர் அருண் வசீகரன் கூறியிருக்கிறார். அத்துடன் நடிகை என்பதையும் தாண்டி ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானமாக தான் இதை பார்ப்பதற்கு தெரிகிறது. அதனால் இதற்கான தண்டனை சட்டரீதியாக அவருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: நயன்தாரா மார்க்கெட்டை உடைத்து த்ரிஷா கையில் மாட்டிய 5 மெகா பட்ஜெட் படங்கள்.. தலை சுற்ற வைக்கும் சம்பளம்

Next Story

- Advertisement -