திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பேரனாலும் சிக்கலை சந்தித்த ரஜினி.. இந்த வயசிலேயே அலும்பு பண்ணிய தனுஷின் வாரிசு

Rajini- Dhanush : ரஜினி சில காலம் கடும் மன உளைச்சலில் இருந்த நிலையில் இப்போது தனது படவேளையில் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். அவருடைய படம் வெற்றி பெற்று வருவதால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை புக் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் ரஜினியின் சொந்த வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

அதாவது தனது மனைவி மற்றும் மகள்களால் சிக்கலை சந்தித்த ரஜினி இப்போது பேரனாலும் ஒரு தலைவலியில் மாட்டிக் கொண்டிருக்கிறார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 17 வருடங்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த சில வருடங்கள் தனித்தனியாக இருந்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தங்களது குழந்தைகளுக்கான நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றன. இதில் பதினாறு வயது நிரம்பிய தனுஷின் மூத்த மகன் யாத்ரா யமஹா ஆர்15 பைக்கை எடுத்துக்கொண்ட போயஸ் கார்டனை வலம் வந்திருக்கிறார்.

Also Read : விஜய் பண்ற வேலையெல்லாம் பார்த்தா கடைசில ராமராஜன் கதி தான் போல.. ரஜினியை பார்த்து கொஞ்சம் திருந்துங்க தளபதி

அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதாவது 18 வயது நிரம்பினால் தான் லைசன்ஸ் கொடுக்கப்படும். இவ்வாறு லைசன்சும் இல்லாமல் ஹெல்மெட் போடாமல் யாத்ரா பைகில் சென்றது சர்ச்சையாகி இருக்கிறது. இந்த பிரச்சனை தான் இப்போது பூதாகரம் எடுத்திருக்கிறது.

யாத்ராவின் தாத்தா மற்றும் அப்பா இருவரும் சினிமாவில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் நிலையில் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும், ரஜினி தனது பேரனுக்கு அறிவுரை கூற வேண்டும் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் சிலர் இதெல்லாம் ஒரு பிரச்சனையாக கிளப்புவதா என கூறி வருகின்றனர்.

Also Read : ரஜினி, அஜித்துக்கு கொக்கி போடும் விஜய் தம்பி.. பாட்ஷாவை தூக்கி சாப்பிட தயாராகும் ஸ்கிரிப்ட்

Trending News