வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜெயிலர் ஒரு புறம் இருக்க சின்னத்திரையிலும் பட்டையை கிளப்பும் ரஜினி.. பிசிறு தட்டாமல் கல்லாவை ரொப்பும் சேனல்கள்

Rajinikanth: தலைவர் என்றாலே மாஸ், கிளாஸ்தான். திரை உலகிலேயே தனது தனித்துவமான ஸ்டைலில் கட்டி போட்டு இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். என்னதான் வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்ன விட்டு போலன்னு சொல்லுவதுபோல, இப்பவும் டாப் நடிகராக இருக்கிறார். அதுக்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் சாட்சி. இப்பவே இப்படின்னா அப்போ சொல்லவா வேணும், “பாட்ஷா” திரைப்படம் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்தும், டிஆர்பி ரேட்டிங் பிச்சு உதறுது.

தொட்டதெல்லாம் துலங்கும்னு சொல்ற மாதிரி இவருக்கு எல்லாமே வெற்றிதான், இவர் நடித்து வெளியான “ஜெயிலர்” திரைப்படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது. தற்போது வரை திரைப்படத்தின் டிக்கெட் விற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதுவரையிலும் உலக அளவில் இந்த திரைப்படம் 600 கோடி வசூலை தாண்டியது. இத்திரைப்படம் தமிழில் 500 கோடியை தாண்டிய படங்கள் லிஸ்டில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

Also Read:57 வயது எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து மரணம்.. காரணம் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன திரையுலகம்

இது ஒரு பக்கம் இருந்தாலும் சின்னத்திரையிலும் இவருடைய ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அது எப்படின்னா சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா திரைப்படமும் அதுக்கு மேல மாஸ் காட்டுகிறது. அப்போது இருந்து இப்போ வரைக்கும் இவருக்கு நிகராக ஸ்டைலில் யாருமே கிடையாது. இவரின் படங்களுக்கு ரசிகர்கள் இடையில் இன்னும் மவுசு குறையல.

சும்மாவா கொடுத்தாங்க பேரு சூப்பர் ஸ்டார்னு, இவர் ரியல் சூப்பர் ஸ்டார்தான். திரைப்படத்தில் இவருடைய அசத்தலான நடிப்பை வெளிக்கொண்டு வந்திருப்பார். இவரின் சாதுவான பக்கத்தையும், கேங்ஸ்டர் ஆக பொங்கி எழும் மறு பக்கத்தையும் ,இந்த ஒரு படத்திலே பாக்கமுடியும். கொடுத்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். இது ஒரு கேங்ஸ்டர் திரில்லர் திரைப்படம், இவருக்கு டப் கொடுக்கும் வகையில் ரகுவரன் வில்லனாக தெறிக்க விட்டிருப்பார்.

Also Read:குணசேகரன் மரணத்தை முன்பே கணித்த ஜீவானந்தம்.. எதிர்நீச்சலில் இந்த காட்சியை கவனித்தீர்களா.?

திரைப்படத்தில் கடந்த கால வாழ்க்கையை மறைத்து தற்போது மாணிக்கம் என்ற பெயரில் ஆட்டோ டிரைவர் ஆக எளிமையாக வாழ்ந்து கொண்டிருப்பார் ரஜினி. அவரின் குடும்பத்திற்கு ரவுடிகளால் ஏற்படும் பிரச்சனையால், மாணிக் பாக்சாவாக அவதாரம் எடுப்பார். பாம்பே தனது கண்ட்ரோலில் வைத்திருந்த மார்க்அன்டனியை சிறையில் அடைத்து விட்டு, மாணிக்கமாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பார்.பிறகு மார்க் ஆண்டனி சிறையில் இருந்து தப்பித்து வந்தும் என்ன நடக்கும், என்பதே ட்விஸ்ட், ஆக்சன் திரில்லர் கொண்ட திரைப்படம் தான் பாட்ஷா.

இத்திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் உலக அளவில் 1995இல் வசூலில் 38 கோடியை தாண்டியது. காமடிக்கு பஞ்சமில்லை, ஆக்ஷன் திரில்லர், ரொமான்ஸ் அனைத்திலும் புகுந்து விளையாட கூடிய திரைப்படம். இத்திரைப்படம் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது, அதற்கு ரசிகர்களிடையே எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது அதன் வெளிப்பாடே 11.57 டிஆர்பி ரேட்டிங்ல மாஸ் காட்டியது பாட்ஷா திரைப்படம்.

Trending News