ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய் அண்ணாவை புடிச்சி தொங்குனது போதும்.. ஷாருக்கான்-ஐ குருவாக ஏற்றுக் கொண்ட அட்லீ.!

அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக வந்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கொடுத்தது விஜய் படத்தை எடுத்ததன் மூலம் தான் என்று சொன்னால் மிகை ஆகாது. அதற்கு ஏற்ற மாதிரி ஒரு படத்தை மட்டும் இயக்குனதோடு இவரை நம்பி முன்னணி ஹீரோவாக இருந்த விஜய் இவருக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார். அதன் மூலம் தான் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என்று மூன்று படங்கள் தொடர்ந்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் மூலமா இவர்களுடைய பிரண்ட்ஷிப் பாலம் உருவானது. விஜய் படத்தை இயக்கியதை வைத்து தான் இவருக்கு ஹிந்தியில் ஷாருக்கான் வைத்து இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஜவான் படத்தின் படப்பிடிப்பை முடித்த நிலையில் கூடிய சீக்கிரம் வெளியிட தயாராக உள்ளது.

Also read: நயன், விக்கி போல இல்ல.. ஷார்ட்டாக மகனுக்கு பெயர் வைத்த அட்லீ

இதனால் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கும் நேரத்தில் அட்லீக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பெயர் மீர் என்று வைத்துள்ளார். தற்பொழுது பெயர் வைப்பதில் அதிக ட்ரெண்டாக இருப்பது அப்பா அம்மாவின் பெயரை அதில் சேர்த்து வைப்பது தான் ஃபேஷன் ஆக எல்லாரும் வைத்து வருகிறார்கள். ஆனால் இவர் ஏன் சாதாரணமாக இப்படி வைத்து விட்டார் என்று யோசித்து நிலையில் தான் அதற்கு ஒரு காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தப் பெயர் ஷாருக்கானின் அப்பா பெயர் என்பதால் அந்தப் பெயரை இவருடைய பையனுக்கு வைத்து அழகு பார்த்து இருக்கிறார். அத்துடன் குழந்தை பிறந்த நேரத்தில் 40 கோடிக்கு மும்பையில் பெரிய வீடு ஒன்று வாங்கி உள்ளார். அந்த வீட்டிற்கு இன்டீரியர் மற்றும் அனைத்து வேலைகளையும் ஷாருக்கானின் மனைவிக்கு கொடுத்துள்ளார்.

Also read: லியோ விஜய் ஃபேமிலி மெம்பர்ஸ்.. சாக்லேட் கம்பெனியாக மாறிய ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்

இப்படி தொடர்ந்து ஷாருக்கானின் புகழைப் பாடிக்கொண்டு அவருக்காக ஒவ்வொன்றையும் செய்து அவருடைய அப்பா பெயர் வைக்கும் அளவிற்கு தற்போது இவர்களுடைய ரிலேஷன்ஷிப் வளர்ந்து விட்டது. அத்துடன் ஷாருக்கானுக்கு நல்ல ஜால்ரா போடுற வேலையும் பார்த்து வருகிறார். இவர் இந்த அளவிற்கு கூஜா தூக்குவது எதுக்கு என்று தெரியவில்லை.

மேலும் இனி விஜய் படம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இவருக்கு பெரிய கவலை இல்லை. ஏனென்றால் மும்பையிலே வீடு வாங்கி இனிமேல் அதிகமாக இந்தி படத்தில் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்துள்ளார். அத்துடன் ஷாருக்கான் தனது குருவாக மனதில் வைத்துக் கொண்டார். ஆனால் இந்த அளவுக்கு ஆட்டம் போடும் அட்லீக்கு ஜவான் படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றால் மட்டுமே நல்லது, இல்லை என்றால் இவருடைய நிலைமை என்னவாக இருக்கும்.

Also read: விஜய் பாணியில் ஷாருக்கான் செய்த விஷயம்.. ஜவான் படத்தை பற்றி அவரே சொன்ன அப்டேட்

Trending News