திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டார்கள். காதல் திருமணம் செய்து 15 ஆண்டுகள் கழித்து ஜெயம் ரவியும், ஆர்த்தியும் பிரிந்திருக்கிறார்கள். பள்ளி பருவம் முதல் உயிருக்கு உயிராக காதலித்த, இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரும், சைந்தவியும் பிரிந்து வாழ்கிறார்கள்.
இதை பார்க்கும்போது நம் தமிழ் சினிமாவுக்கு என்ன தான் ஆயிற்று என்று தான் தோன்றுகிறது. இவர்களை கண்டு ரசித்தவர்களுக்கு காதல் மீதிருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போகிறது. இன்றைய காலகட்டத்தில், காதலுக்கான தேவைகளும் மாறிவிட்டது என்றே சொல்லலாம்.
முன்பெல்லாம், என்னை தாங்க கூடிய மனைவி வேண்டும் என்று ஆண்கள் கேட்பார்கள். பெண்களோ, என்னை மஹாராணி போல் நடத்தும் கணவன் வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் இப்போது, அப்படி கேட்டாலும், உண்மையில் ஒரு சிவப்பு கம்பளத்தை கட்டி கொண்டு தான் அழுகிறார்கள்.
உருகி உருகி காதலிப்போரை உதறி தள்ளிவிட்டு, தன்னை கண்டுகொள்ளாதவர்களுக்கு பணிவிடை செய்வார்கள். இதில் சினிமா பிரபலங்கள் மட்டுமென்ன விதிவிலக்கா? அவர்களும் அப்படி தான். மேலும் அவர்களுடைய கலாச்சாரமே வேறு.. இந்த நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு விரைவு விவாகரத்து நடக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேச பட்டு வருகிறது.
அட கொடுமையே.. இவ்வளவு நல்ல எண்ணமா?
ஒரு காலத்தில், சினிமா பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்யும் சீசனாக இருந்தது. இப்போது விவகாரத்து சீசனாக மாறி விட்டது. இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனுக்கும், கிருஷ்ண வம்சிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். மேலும் அவர்களுக்கு விவாகரத்தும் கிடைத்துவிட்டது என கடந்த சில மாதங்களாக பேசப்படுகிறது.
ரம்யா கிருஷ்ணன் சென்னையிலும், கணவர் ஹைதராபாத்திலும் இருக்கிறார். இதை வைத்து தான் இந்த பேச்சு துவங்கியது. ஆனால் இது முழுக்க முழுக்க புரளி தான். யார் பார்த்து விட்ட வேலை என்று தெரியவில்லை. அவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சலித்துக்கொண்டுள்ளார் வம்சி.
மேலும், “நானும், ரம்யா கிருஷ்ணனும் பிரியவில்லை. நாங்கள் விவாகரத்து பெறவில்லை. வேலை காரணமாக நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன். அவ்வளவு தான். உடனே விவாகரத்து ஆகிவிட்டது என்று சொல்வதை கேட்கும்போது வேதனை அளிக்கிறது. ரம்யா ஒரு நல்ல மனைவி, நல்ல அம்மா” என்று குறிப்பிட்டுள்ளார்.