ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சுத்துன ரீல் எல்லாம் அந்து போச்சு.. SK-க்கு சப்போர்ட் செய்த இமானின் EX மனைவி, வாயடைக்க வைத்த பார்த்திபன்

Sivakarthikeyan-Imman-Parthiban: லியோ ஒரு பக்கம் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில் சிவகார்த்திகேயன், இமான் சம்பந்தப்பட்ட பிரச்சனையும் வேகம் எடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தப் பிரச்சனையில் தற்போது அதிரடி திருப்பமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

அதாவது சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக இமான் கூறியிருந்த நிலையில் அவருடைய முதல் மனைவி தன்னுடைய கருத்தை தடாலடியாக வெளியிட்டு இருந்தார். அதில் சிவகார்த்திகேயன் பாவம், எங்களுக்கு நல்லது தான் செய்தார் என்றும் இமான் பட வாய்ப்பு இல்லாததால் இப்படி வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் விவாகரத்துக்கு பிறகு ஜீவனாம்சம் கூட தரவில்லை. அரசியல்வாதிகளை வைத்து மிரட்டினார்கள் என்றெல்லாம் குற்றப்பத்திரிகை வாசித்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் நடிகை குட்டி பத்மினி மோனிகா சொல்வது அத்தனையும் கட்டுக்கதை, வேண்டுமென்றே பழி போடுகிறார் என்று உண்மையை விளக்கினார்.

அதைத்தொடர்ந்து அவர் கூறிய மற்றொரு விஷயம் சுத்த பொய் என்பது ஒரு பிரபலம் மூலம் வெளியாகி இருக்கிறது. அதாவது இமானுக்கு வாய்ப்பே இல்லை என்று மோனிகா தெரிவித்த நிலையில் தற்போது பார்த்திபன் இயக்க இருக்கும் படத்தில் அவர் இணைந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்திபன் தனக்கே உரிய பாணியில் வெளியிட்டுள்ளார். அதாவது ரஹ்மானுடன் இணைந்த நான் வரும் படத்தில் ஒரு மானுடன் இணைய இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இமானுடன் அவர் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் மோனிகா சொன்னது அத்தனையும் பொய் என்று தெரியவந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் தற்போது இமான் கைவசம் மழை உள்ளிட்ட சில படங்களும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயனுக்கு வக்காலத்து வாங்க வேண்டும் என்பதற்காகவே மோனிகா இப்படி ஒரு அண்ட புழுகை சொல்லி இருக்கிறார். இதன் மூலம் அவர்களுடைய சாயம் வெளுத்து போய், சுத்துன ரீல் எல்லாம் அந்து போச்சு என்ற கதையாக மாறி இருக்கிறது.

Trending News