ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது.. நொந்து போன TTF வாசன்.. இத்தனை நாள் கோமாவிலா இருந்தீர்கள்?

வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன். அவரை யூடியூப்பில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன், மஞ்சள் வீரர் படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை செல் அம் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே திருவிக பூங்கா என்கிற படத்தை இயக்கி இருக்கிறார்.

மஞ்சள் வீரன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், “மஞ்சள் வீரன்” படத்திலிருந்து டி.டி.எஃப்.வாசனை நீக்குவதாக அப்படத்தின் இயக்குநர் செல் அம் அறிவித்திருந்தார். மேலும், அவர் தான் சூப்பர் ஸ்டார்.. ஆனா படத்துல இருந்து தூக்குறோம் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

நொந்துபோன TTF

இது TTF விழுதுகள் மத்தியில் ஒரு சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும், குப்பற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாதது போல, நல்ல வேலை என் தலைவன் உன் படத்தில் நடிக்கவில்லை, என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், டி.டி.எஃப்.வாசன் தனது யூடியூப் சேனலில் பேசி உள்ளார். அதில், இயக்குநர் செல் அம்,என்னை படத்தில் இருந்து நீக்கியதே எனக்கு தெரியாது. இதுபற்றி அவர் ஒரு முறைக்கூட என்னிடம் பேசியது இல்லை. அதுமட்டுமில்லாமல், அவர் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி இருந்தார். ஆனால், மஞ்சள் வீரன் படத்தின் போட்டோஷூட் மட்டுமே நடந்தது.”

“அந்த முதல் நான் போட்டோஷூட் மற்றும் படபூஜைக்கு கூட நான் பணம் செலவு செய்தேன். அந்த பணத்தைக்கூட நான் கேட்க மாட்டேன். ஆனால், என்னிடம் சொல்லி இருக்கலாம், என்னிடம் எதையும் சொல்லாமல் நேரடியாக மீடியாவில் என்னை நீக்குவதாக சொல்லி இருக்கிறார். அது வருத்தம் அளிக்கிறது.”

“அவருக்கு புது தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார். அவரே அந்த படத்தின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதை என்னிடம் அண்ணன் சொல்லி இருந்தால் கூட, நான் சரி அண்ணா பண்ணுங்க என்று சொல்லி இருப்பேன். ஆனால், மீடியாவில் என்னை நீக்கிவிட்டதாக சொல்லி இருக்கிறார்.”

“இதுகுறித்து பேச நான், அவரை பலமுறை தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் என் அழைப்பை எடுக்கவில்லை. வேறு யார் யாரோ போனை எடுத்து சார் பிஸியாக இருப்பதாக கூறுகின்றனர். நான் செலவு செய்த பணத்தில் எனக்கு ஒரு பைசாக்கூட வேண்டாம், ஆனால், எதற்காக என்னை படத்தில் இருந்து நீக்கினார் என்ற காரணத்தை மட்டும் சொன்னால் போதும்”

இவரை பார்த்தாலும் ஒரு பக்கம் பாவமாக தான் இருக்கிறது..

Trending News