புதன்கிழமை, ஜனவரி 15, 2025

CWC5: குக் வித் கோமாளி TRP-க்காக என் ஆள் மேல கை வைப்பீங்களா?. செம டென்ஷன் ஆன மஞ்சள் வீரன்

CWC5: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி மீது ஏற்கனவே மக்களுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பிடிப்பு இல்லை. இதில் நம்ம மஞ்சள் வீரன் கூட்டி இருக்கும் பஞ்சாயத்தால் மொத்தமாக எல்லாம் ஊத்தி மூடிவிடும் போல.

விஜய் டிவிக்கு இந்த குக் வித் கோமாளி சீசன் 5 வாழ்வா சாவா என்கிற போராட்டம் தான். வெங்கடேஷ் பட், மீடியா மேசன் என குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பெரிய காய்கள் அத்தனையும் நகர்ந்துவிட்டன.

நகர்ந்தா கூட பரவாயில்லை, போட்டிக்கு வேற சேனல்ல கூடாரம் போட்டு உட்கார்ந்து இருக்காங்க. அவங்கள ஜெயிச்சே ஆக வேண்டும் என்று இருக்கும் சூழ்நிலையில், உள்ளே இருக்கும் கோமாளி மீது தப்பான ஒரு கருத்து வெளியில் வந்தால் அது நிகழ்ச்சியை ரொம்பவே பாதிக்கும்.

விஜய் டிவி டிஆர்பிக்காக ஆசைப்பட்டு செய்த ஒரு விஷயம் இப்போது அந்த சேனலுக்கே விபரீதமாக முடிந்து விட்டது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் செய்யும் அட்டகாசம் எல்லோருக்குமே தெரியும். சீசனுக்கு சீசன் லவ் ட்ராக் ஓட்டிக் கொண்டிருப்பார்.

அவருக்கு அதுவே செட்டாகிவிட கல்யாணத்துக்கு அப்புறமும் அதை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் இந்த சீசனில் யூடியூப் பிரபலம் காதலி ஜோயா கலந்து கொண்டிருக்கிறார். அவரிடமும் லவ் டிராக்கை வழக்கம் போல ஆரம்பித்து விட்டார் புகழ்.

செம டென்ஷன் ஆன மஞ்சள் வீரன்

லவ் ட்ராக் என்றால் பேசுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் கையைப் பிடித்து பேசுவது, தோளில் இடிப்பது போன்ற சில விஷயங்களை செய்வதை நாமே கவனித்து இருக்கிறோம். இதுவரையிலும் அதை பெரிய அளவில் பிரச்சனை ஆனது கிடையாது.

ஆனால் வாசன் தன்னுடைய காதலியிடம் புகழ் இப்படி நடந்து கொள்வது தனக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்து இருக்கிறார். வாசனைக்கு ஒரு மனக்கஷ்டம் என்றால் 2k கிட்ஸ்களால் தாங்க முடியாது. இதனால் இப்போது புகழை வசைப்பாடி வருகிறார்கள்.

டிடிஎஃப் வாசன் மூலம் சேனலுக்கு டிஆர்பி ஏத்திக் கொள்ளலாம் என்று விஜய் டிவி நினைத்தது. ஆனால் காதலியை விஜய் டிவிக்கு அனுப்பி வைத்துவிட்டு அதன் மூலம் தன்னை பிரபலப்படுத்தும் வேலையில் பிஸியாகிவிட்டார் டிடிஎஃப் வாசன். இதைத்தான் அவன் பொருளை எடுத்து அவனையே போடுறது என்று சொல்வார்கள் போல.

Trending News