வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

டைரக்டர் தான் வெத்துவேட்டு.. ஹீரோ இல்ல.. நடிச்சு முடிச்சு போஸ்ட்டரே ரிலீஸ் பண்ணியாச்சு…

ஒரு யூடியூபர் இத்தனை சர்ச்சைகள் ல மாட்ட முடியுமா என்று நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய நபர், சமீபத்தில் நீயும் வேண்டாம், உன் படமும் வேண்டாம், நான் கொடுத்த காசை என் பிச்சையாக வைத்துக்கொள் என்ற ரேஞ்சுக்கு பேசிவிட்டு சென்றார். என்ன பாஸ் அப்போ படம் அவ்ளோ தானா என்று எல்லாரும் கேட்க்கும் நேரத்தில், மிரட்டல் அப்டேட் ஒன்று கொடுத்திருக்கிறார்.

யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசனின் இரண்டாவது படமான ஐபிஎல் படம் தற்போது அவருடைய முதல் படமாக மாறியுள்ளது. இப்படத்தில் நடிகர் ஆடுகளம் கிஷோர், நடிகை அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். இருந்தாலும் ஒருவருக்கு வாழ்க்கை இப்படி அமைய வேண்டும், பாருங்களேன் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவர் எல்லாம் ஹீரோ ஆகிட்டார் என்று நெட்டிசன்கள் புலம்பிய நேரமா என்ன என்று தெரியவில்லை, மஞ்சள் வீரம் படம் புஷ்வாணமாக போய்விட்டது.

கருத்து சொல்ல வருகிறார் TTF

ராதா ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கருணாகரன் இயக்கத்தில் உருவாகும் IPL படத்திற்கு, விநாயகமூர்த்தி இசையமைக்க உள்ளார். இது பான் இந்தியா படமாக வேற உருவாகி வருகிறது. இந்த படம் எப்படி பட்ட படமாக இருக்கும் என்பதை சமீபத்தில் இயக்குனர் கூறியுள்ளார்.

“நாட்டில் நடக்கும் சில திடுக்கிடும் குற்றங்களை செய்தித்தாளில் படித்திருப்போம். அதை கொஞ்ச நாளிலே மறந்துவிடுவோம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசியல் சூழ்ச்சியால் வெளியில் வர முடியாமல் தவித்து கொண்டிருப்பார். அப்படிபட்ட அப்பாவி மக்கள், அதிலிருந்து மீண்டு வர என்ன செய்கிறார்கள் என்பது தான் கதையாம்..”

இதை தொடர்ந்து நெட்டிசன்கள், இதே போல நூறு கதை பார்த்துவிட்டோம். அதை நீங்கள் எவ்வளவு ஸ்வாரஸ்யமாக கொண்டுசெல்கிறீர்கள், படத்தில் எப்படி தலைவர் TTF நடித்திருக்கிறார் என்பது பொறுத்து தான் ஓடுமா ஓடாதா என்பது எல்லாம்.

Trending News