ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

டிடிஎஃப் வாசனுக்கு மீண்டும் இடியாய் வந்த இழப்பு.. கொந்தளிக்கு 2k கிட்ஸ்

யூடியூப்பில் ‘ட்வின் த்ராட்லர்ஸ்’ என்ற சேனலை நடத்தி அதிவேகமாக பைக்குகளை ஓட்டி சிறுவர் மற்றும் இளைஞர்களை கவர்ந்து வந்தார் டிடிஎஃப் வாசன். யூடியூப்பில் இவருக்கு 40 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர், டிடிஎஃப் வாசன் 2K கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வந்தன.

பல முறை ஜெயிலுக்கு போயி கம்பி எண்ணி உள்ளார். ஆனால் ஒரு சில நேரங்களில், அவர் சிவனே என்று இருக்கும்போது கூட வம்படியாக ஏதாவது ஒரு பிரச்சனையில், போலீஸ் இழுத்து விட்டு சென்றுவிடுகின்றனர். இப்படி பட்ட சூழ்நிலையில், இவரை வைத்து படம் செய்ய போவதாக ஒரு இயக்குனர் களமிறங்கினார். இவருக்கு ஹீரோயினாக அமலா ஷாஜி நடிப்பார் என்றெல்லாம் பேச பட்டு வந்தது.

தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், இயக்குநர் செல் அம் இயக்கத்தில் ‘மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎஃப் வாசன் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானதோடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வைரலானது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மற்றொரு பக்கம் பைக்கை வைத்து சாகசம் காட்டியபோது தான் வாசன் போலீசில் சிக்கி பைக் ஓட்ட 10 ஆண்டு கால தடை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், படத்தின் இயக்குனருக்கும் டிடிஎஃப்-க்கும் திடீரென்று பிரச்சனை ஏற்பட்டதா என்னவென்று தெரியவில்லை. அவர்களுக்குள் எந்த மனக்கசப்பு இருந்தமாதிரியும் தெரியவில்லை. ஆனால் மஞ்சள் வீரன் படத்திலிருந்து அவரை விளக்கியுள்ளார் படத்தின் இயக்குனர்.

‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனை நீக்குவதாக படத்தின் இயக்குனர் செல் அம் அறிவித்துள்ளார். ‘அவர்தான் சூப்பர்ஸ்டார்.. ஆனா படத்துல இருந்து தூக்குறோம்’ என்று கூறிய இயக்குநர் எந்த காரணத்திற்காக டிடிஎஃப் வாசனை படத்தில் இருந்து நீக்குகின்றனர் என்பதை தெரிவிக்கவில்லை. மேலும், டிடிஎஃப் வாசன் ‘ஐபிஎல்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், 2k கிட்ஸ், “நீ என்னடா என் தலைவன வேண்டாம்னு சொல்லுறது.. அவருக்கு நீயும் வேண்டாம், உன் படமும் வேண்டாம்” என்று கொந்தளித்து வருகின்றனர்.

Trending News