ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பகத் பாசிலுக்கு டஃப் கொடுத்த படம்.. மனுஷன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்!

இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் பகத் பாசிலின் பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அந்த அளவிற்கு தவிர்க்க முடியாத ஒரு சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மலையாள நடிகரான இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் பஹத் பாசில் நடித்து வருகிறார்.

பகத் நடிப்பில் உருவாகியுள்ள மாலிக் படம் வரும் 15 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது . திரையரங்கிற்காக பிரமாண்டமாக தயாரான இப்படம், ஊரடங்கு காரணமாக ஓடிடியில் வெளியாகிறது.

இந்நிலையில் தான் இதுவரை நடித்த படங்களிலேயே மிகவும் சிரமப்பட்டு நடித்த படம் மாலிக் தான் என பஹத் பாசில் கூறியுள்ளார் . இந்தப் படத்தில் பகத் பாசில் நடித்துள்ள மாலிக் கதாபாத்திரத்தின் முப்பது வருட வாழ்க்கை காட்டப்படுகிறது .

ஒவ்வொரு வயதுக்கேற்ப உடல் எடையை கூட்டவும், குறைக்கவும் செய்து அதற்கேற்ப உடல் மொழியையும் மாற்றி நடிக்க வேண்டி இருந்திருக்கிறது . இதுவரை நடித்த வேடங்களில் இதுவே சவாலானதாக இருந்தது என்று பகத் கூறியுள்ளார்.

பகத் நடித்துள்ள அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் முடிவடைந்துள்ளது. லோகேஷ் கனகராஜின் விக்ரம் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. மேலும் ஹந்திப் படம் ஒன்றில் விரைவில் நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

fahad-fazil
fahad-fazil

Trending News