Singapenne Serial: தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் சிங்க பெண்ணே சீரியலுக்கு தான் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து கொண்டாடி வருகிறார்கள். முக்கியமாக அன்பு மற்றும் ஆனந்தியின் காதல் ஒன்று சேர போகிறது என்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் காதலிக்கிறார்கள் என்று தெரியாமலேயே மகேஷ், அன்புவின் அம்மாவிற்கு ஒரு சத்தியத்தை பண்ணி கொடுக்கிறார்.
அதாவது அன்புவின் அம்மா ஆனந்தியை வெறுப்பதற்கான முக்கிய காரணம் அன்பு எங்கே ஆனந்தியை காதலித்து விடுவாரோ என்ற பயம் தான். ஏனென்றால் அன்பு சின்ன வயசாக இருக்கும் பொழுது அன்புக்கு துளசி தான் என்று சம்பந்தத்தை பேசி முடித்து விட்டார்கள். அதனால் அன்புக்கு எப்படியாவது துளசியை கட்டி கொடுக்க வேண்டும் என்று அன்புவின் அம்மா ஆசையுடன் இருக்கிறார்.
இதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மகேஷ், அன்புவின் அம்மாவை சந்தித்து உங்கள் ஆசைப்படி நிச்சயம் அன்பு, துளசியை தான் கல்யாணம் பண்ணுவார் என்று வாக்கு கொடுத்து விடுகிறார். இவர் இப்படி வாக்கு கொடுப்பதற்கான காரணம் என்னவென்றால் அன்பு காதலித்து வருவது துளசியை தான் என்று தவறாக புரிந்து கொண்டார்.
அந்த வகையில் இன்னும் ஒரு சில நாட்களில் துளசி என்டரி கொடுக்கப் போகிறார். இந்த நாடகத்தின் கதை சற்று மாறப்போகிறது. இருந்தாலும் அன்பு மற்றும் ஆனந்தின் காதல்தான் கடைசி வரை கைகூடும் என்பதால் துளசி மகேஷ்க்கு ஜோடியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் துளசியாக யார் வருகிறார் என்றால் வானத்தைப்போல சீரியலில் சின்ராஸ்க்கு தங்கையாக துளசி கேரக்டரில் நடித்த மானிய ஆனந்த்.
இவர்தான் இனி சிங்க பெண்ணே சீரியலில் துளசி கேரக்டரில் வரப்போகிறார். அந்த வகையில் மகேஷ்க்கு ஜோடியாக இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இனி முக்கோண காதலுக்கு முடிவு கட்டும் நேரம் வந்தாச்சு. இவர் வந்தாலே சென்டிமென்ட்க்கு பஞ்சமே இல்லை என்பதற்கு ஏற்ப இந்த நாடகம் முழுவதும் செண்டிமெண்டாகத்தான் ஒளிபரப்பாக போகிறது.