செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிரசாந்தின் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்ட 6 படங்கள்.. அதிலும் ஷங்கர் டைரக்ஷன் செம மாஸ்

தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு நிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஒரு சில காரணங்களால் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை. பிரசாந்த் நடித்த படங்களில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படங்களை பார்க்கலாம்.

வைகாசி பொறந்தாச்சு : ராதாபாரதி இயக்கத்தில் 1990ல் வெளியான திரைப்படம் வைகாசி பொறந்தாச்சு. பிரசாந்த் கதாநாயகனாக அறிமுகமான இப்படத்தில் பள்ளி மாணவனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக காவேரி நடித்திருந்தார். பிரசாந்தின் முதல் படமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி விழா கண்டது.

செம்பருத்தி : ஆர்கே செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த், ரோஜா நடிப்பில் வெளியான திரைப்படம் செம்பருத்தி. இப்படத்தில் பணக்கார வீட்டு பையனான பிரசாந்த், வேலைக்காரப் பெண்ணாக உள்ள ரோஜாவை காதலிக்கிறார். இறுதியில் இவர்கள் சேர்ந்தார்களா என்பது செம்பருத்தி கதை. எளிமையான கதையாக இருந்தாலும் இப்படத்தில் பிரஷாந்தின் நடிப்பின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.

ஆணழகன் : தியாகராஜன் இயக்கத்தில் 1995 இல் வெளியான திரைப்படம் ஆணழகன். இப்படத்தில் பிரசாந்த் தன் காதலில் வெற்றிபெறுவதற்காக பெண் வேடமிட்ட நடித்திருந்தார். பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு பேரழகியாக இருந்தார். ஆணழகன் படம் பிரசாந்துக்கு திருப்புமுனையாக அமைந்தது.

திருடா திருடா : மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் திருடா திருடா. இப்படம் ஆக்ஷன், காமெடி, காதல், சென்டிமென்ட் என அனைத்திலும் பட்டையை கிளப்பியது. சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடும் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்களுக்கும் ஆயிரம் கோடி பணம் இருக்கும் கன்டெய்னர் கிடைக்கிறது. நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் பிரசாந்துக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது.

ஜீன்ஸ் : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜீன்ஸ். இப்படத்தில் விஸ்வநாதன், ராமமூர்த்தி என ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாகப் படம் முழுக்க ஒரே காஸ்ட்யூமில் தோன்றினாலும் தன் நடிப்பின் மூலம் இருவருக்கும் வித்தியாசம் காட்டியிருந்தார் பிரஷாந்த். ஜீன்ஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஜோடி : பிரசாந்த், சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஜோடி. இசை மேல் ஆர்வமுள்ள இருவரும் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர். குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதற்காக பெற்றோர்களின் மனதில் இடம் பிடிக்க சிம்ரன் பிரஷாந்த் வீட்டிற்கும், பிரசாந்த் சிம்ரன் வீட்டிற்கும் செல்கிறார்கள். இறுதியில் இருவரும் இணைந்தார்களா என்பதே ஜோடி.

Trending News