வியாழக்கிழமை, மார்ச் 13, 2025

பெரியார் யார் தெரியுமா.? நிதி அமைச்சருக்கு TVK தலைவர் கொடுத்த பதிலடி

TVK Vijay: தமிழ் மும்மொழி கொள்கை பற்றிய சலசலப்பு தான் கடந்த சில மாதங்களாக அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தமிழ்நாட்டு எம்பிகள் குறித்து பேசியதை வாபஸ் வாங்க வைத்து விட்டீர்கள்.

ஆனால் பிரபல மூத்த தலைவர் ஒருவர் தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னார். அவருடைய படத்திற்கு மாலை போட்டு மரியாதை செலுத்துகிறீர்கள் என பெரியார் குறித்து விமர்சித்து இருந்தார்.

TVK தலைவர் கொடுத்த பதிலடி

அதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழை காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னதற்காக நிஜமாகவே நிதி அமைச்சர் வருத்தப்படுகிறாரா?

அப்படி என்றால் மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே. முரண்களை கடந்து பெரியாரை ஏன் போற்றுகிறோம் என தெரியுமா.

குழந்தை திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதி கொடுமைகளை எதிர்த்ததால் என சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்து சொன்னால் இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை நூற்றாண்டுகளுக்கு முன்பே கேட்டவர்.

இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இது போதாதா தமிழ்நாடு அவரை மாலை மரியாதையை செய்து போற்றுவதற்கு என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விஜய் நிதி அமைச்சருக்கு பதிலடி கொடுத்ததாகவும் பெரியார் பற்றி கிளாஸ் எடுத்ததாகவும் அவருடைய தொண்டர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அவரின் இந்த அறிக்கை தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Trending News