செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

விஜய் தொடங்கும் புதிய டிவி சேனல்.. ஆளுங்கட்சிக்கு எதிராக ஜனங்களின் நாயகன் இறக்கும் அடுத்த அஸ்திரம்

Vijay: விஜய்யின் கடைசி படமாக உருவாகும் தளபதி 69 படத்தின் போஸ்டர்கள் நேற்று வெளியானது. அதில் படத்தின் பெயர் ஜனநாயகன் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாளைய தீர்ப்பு என்ற பெயர் வைக்கப் போவதாக தகவல்கள் கசிந்தது. ஆனால் ஜனநாயகன் என வெளியாகி இருக்கும் இந்த தலைப்பு அத்தனை பொருத்தமாக இருக்கிறது.

அதிலும் இரண்டாவதாக வெளியான போஸ்டரில் நான் ஆணையிட்டால் என விஜய் சாட்டையை சுழற்றியபடி போஸ் கொடுத்திருந்தார்.

அதுதான் இப்போது ட்ரெண்டாகி வருகிறது. அது மட்டும் இன்றி மத்திய, மாநில ஆளும் கட்சிகளுக்கான பதிலடியாகவும் இந்த போஸ்டர் உள்ளதாக கருத்துக்கள் எழுந்துள்ளது.

விஜய் தொடங்கும் புதிய டிவி சேனல்

ஏற்கனவே விஜய் தன்னுடைய அரசியல் எதிரி யார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். அதன்படி தற்போது அவருடைய இறுதி படம் முழு அரசியல் கதையாக இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த பெயரை வைத்து அவர் தன்னுடைய அடுத்த அஸ்திரத்தை இறக்கவும் தயாராகிவிட்டார். அதாவது விஜய் விரைவில் டிவி சேனல் நியூஸ் பேப்பர் ஆகியவற்றை தொடங்க இருக்கிறார்.

அதன் பெயர் ஜனநாயகன் என்ற தகவலும் தற்போது கசிந்துள்ளது. ஏற்கனவே திமுக அதிமுக தேமுதிக ஆகிய கட்சிகள் டிவி சேனல்கள், பத்திரிகை ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் விஜய் தொடங்க இருக்கும் இந்த புது முயற்சி நிச்சயம் வரவேற்பு பெரும் என தெரிகிறது. இதன் மூலம் இன்றைய அரசியல் மற்றும் சமூக நிலை வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News