திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

தளபதிக்காக வேலையை விட மாட்டீங்களா.. TVK கட்சியை காலி பண்ண இவர் ஒருத்தர் போதும் 

Vijay: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகளும் விமர்சனங்களும் பெருகி வருகிறது. அதிலும் கட்சியின் பெயரில் தொடங்கி கொடியின் நிறம், யானை புகைப்படம் என எல்லாமே தகராறு தான். 

இதையெல்லாம் தாண்டி விஜய்யின் விசுவாசிகள் என்ற பெயரில் சிலர் அடிக்கும் கூத்தும் பேசு பொருளாக மாறுகிறது. அதிலும் அவருடைய வலதுகரமான புஸ்ஸி ஆனந்த் அவ்வப்போது எதையாவது பேசி நெட்டிசன்களின் எதிர்ப்பை சம்பாதித்து விடுவார். 

அப்படித்தான் தற்போது அவர் பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையாக மாறி இருக்கிறது. அதாவது தமிழக வெற்றி கழகத்தின் முதல் காட்சி மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ஆனால் தீபாவளிக்கு சில தினங்கள் முன்பு நடக்கும் இந்த மாநாட்டில் எப்படி பங்கேற்க முடியும் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது. அதேபோல் மாநாடு நடப்பதோ விக்ரவாண்டி சாலையில். சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பலருக்கு இதுதான் முக்கிய வழிச்சாலை.

வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட புஸ்ஸி ஆனந்த்

இதனால் தீபாவளிக்கு நான்கு நாட்கள் முன்பிருந்தே அங்கு கூட்ட நெரிசல் இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாநாடு எதற்கு என்பதுதான் அனைவரின் கேள்வி. ஆனால் புஸ்ஸி ஆனந்த் தீபாவளிக்கு போனஸ் தந்தால் என்ன? வேலையே போனால் என்ன?

தளபதியை பார்க்க வருகிறவன் தான் உண்மையான கட்சியின் தொண்டன் என பேசி இருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் கோபமாக கமெண்ட் கொடுத்து வருகின்றனர். எந்த தலைவனும் முதலில் குடும்பத்தைப் பார் என்றுதான் சொல்ல வேண்டும். 

ஆனால் வேலை போனாலும் பரவாயில்லை மாநாட்டிற்கு வரவேண்டும் என்பது என்ன லாஜிக். இந்த கட்சியை காலி செய்ய இவர் ஒருத்தர் போதும். விஜய் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறார் என குறிப்பிட்டு வருகின்றனர்.

உண்மையில் மக்கள் நலனை யோசித்து இருந்தால் தீபாவளிக்கு முன் மாநாட்டை நடத்த விஜய் யோசித்து இருக்க மாட்டார். இதிலிருந்தே தெரிகிறது என இணையவாசிகள் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படையாக காட்டி வருகின்றனர்.

கடும் எதிர்ப்பை சம்பாதிக்கும் விஜய்யின் வலது கரம்

Trending News