Vijay: நடிகர் விஜய் இன்று தன்னுடைய தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதன்மை பொறுப்பாளர்களை அறிவித்திருக்கிறார்.
ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள், நிர்வாகிகளை அறிவித்திருந்தார். இந்நிலையில் கட்சியின் முதற்கட்ட தலைவர்களின் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.
விசிக கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரச்சார பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதிமுகவிலிருந்து விலகி விஜய் கட்சிக்கு வந்திருக்கும் நிர்மல் குமாருக்கு பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று விஜய் டிவியின் பேச்சாளர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு வெளியாகிய உடனேயே விஜயின் ஆதரவாளர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்திருக்கிறார்கள்.
அதே நேரத்தில் கொளுத்தி போடும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது இவ்வளவு நாள் விஜய்காக எல்லாமே செய்தது அவருடைய ரசிகர்கள் தான்.
அப்படி இருக்கும் பொழுது புதிதாக வந்தவர்களை முதற்கட்ட பொறுப்பாளர்களாக மாற்றுவது நியாயமா என்ற கேள்விதான். இது பெரிய பிரச்சனையாக வெடிக்குமா, அல்லது புஸ்வானமாக மறையுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
