Vijay: நடிகர் விஜய்யின் 2026 அரசியல் எப்படி இருக்கும் என பல்வேறு விதத்தில் கணிப்புகள் வெளியானது. அது அத்தனையையும் தவிடு பொடியாக்கி திடீர் பாய்ச்சல் பாய்ந்திருக்கிறார் தளபதி.
சமீபத்தில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களின் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதனால் கட்சிக்கொள் கொஞ்சம் சலசலப்பும் ஏற்பட்டது.
உள்ளே நுழையும் முக்கிய புள்ளி
இதையெல்லாம் தாண்டி விஜய் தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாய் உருவெடுப்பது போல் சிலர் தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்து வந்தார்கள்.
ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்திற்கு ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா என்ற இரண்டு வியூக காரர்கள் இருக்கிறார்கள்.
இதை தாண்டி தேசிய கட்சிகளுக்கு தேர்தல் வியூகத்தை வகுத்துக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோரை இன்று விஜய் சந்தித்திருக்கிறார்.
அவருடன் கட்சியின் தேர்தல் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் சென்றிருக்கிறார். இது மட்டுமில்லாமல் விஜய் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.