பிறந்தநாள் கொண்டாட்டத்தை நிறுத்துங்க.. செய்ய வேண்டியது இதுதான், TVK தலைவர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு

Vijay: நாளை விஜய் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ரசிகர்கள் பல முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அது மட்டும் இன்றி பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவருடைய போக்கிரி, துப்பாக்கி போன்ற படங்களும் ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் தியேட்டர்களில் அதைக் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் விஜய் தற்போது தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை நிறுத்தும் படி உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள இவர் தன்னுடைய ஒவ்வொரு நகர்வையும் கவனமாக செய்து வருகிறார்.

அதில் தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து பலர் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். விஜய்யும் தமிழக அரசின் அலட்சியம் தான் இதற்கு காரணம் என நேரடியாகவே குற்றம் சாட்டியிருந்தார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தை நிறுத்திய விஜய்

அது மட்டும் இன்றி நேற்று கள்ளக்குறிச்சிக்கு விரைந்து சென்ற அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து பேசினார். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் அவர் தன் கட்சி தொண்டர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதன்படி தன்னுடைய பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம். தற்போது கள்ளக்குறிச்சி மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது. உடனே அங்கு நிர்வாகிகள் அனைவரும் விரைந்து சென்று மருத்துவம் தொடர்பான உதவிகள் மற்றும் பிற அத்தியாவசிய உதவிகளை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனால் நாளை விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நிறுத்தப்படும் என தெரிகிறது. அது மட்டும் இன்றி கோட் படத்திலிருந்து அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுவும் தள்ளி போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு எதற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டம். அவர்கள் ஒன்றும் வீரமரணம் அடைந்து விடவில்லையே. குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் மது அருந்தி பாதிக்கப்பட்டவர்களை எதற்காக நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற கமெண்ட்டுகளும் ஒரு பக்கம் குவிந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி சம்பவத்தால் விஜய் போட்ட உத்தரவு

Next Story

- Advertisement -