ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025

ஏஜிஆர்-ஆக மிரட்டும் சிம்பு.. அனல் பறக்கும் பத்து தல ட்விட்டர் விமர்சனம்

சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ள சிம்பு தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். அந்த வகையில் இன்று சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படம் வெளியாகி உள்ளது. இப்படம் கன்னட மொழியில் வெளியான மஃப்ட்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையை சிம்பு ரசிகர்கள் இன்று எப்போது விடியும் என்ற காத்திருந்த நிலையில் அவர்களுக்கு சரவெடியாக அமைந்துள்ளது பத்துதல படம். அந்த வகையில் படத்தின் முதல் பாதி மட்டும் பார்த்த ரசிகர் ஒருவர் ஃபர்ஸ்ட் ஆஃப் நன்றாக உள்ளது என்றும், கதை புரிந்து கொள்ள சிறந்த நேரம் எடுக்கும் என்றும் பதிவிட்டிருந்தார்.

pathu-thala-review

Also Read : பத்து தல படத்திற்கு கேவலமா ப்ரமோஷன் செய்யும் கூல் சுரேஷ்.. சிம்பு பெயரை கெடுக்க இவரே போதும்

மேலும் இடைவெளிக்கு பிறகு சிம்பு களமிறங்க போகிறார். எனவே இப்போது ஏஜிஆரின் கோபத்தைக் காண காத்திருக்கிறோம் என பதிவிட்டிருந்தார். மேலும் மற்றொரு ரசிகர் படத்திற்கு சரியான இடைவெளி என்றும், இரண்டாம் பாதி தான் கதையை தீர்மானிக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

pathu-thala-review

மேலும் பத்து தல படத்தின் முதல் பாதி சிலிர்ப்பான மற்றும் உற்சாகமான தருணங்களால் நிரம்பியுள்ளது. படத்தில் திரைக்கதை சுவாரஸ்யமானது, எதிர்பாராத திருப்பங்களுடன் உங்களை ஈடுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி கௌதம் கார்த்திக்கு இப்படம் சரியான தொடக்கமாக இருக்கும்.

pathu-thala-twitter-review

Also Read : ஒரே தலையால் பத்து தல-க்கு வந்த முட்டுக்கட்டை.. விடுதலைக்கு மட்டுமே அமோக வரவேற்பு

பத்து தல படத்தில் சுவாரஸ்யம் தேடும் போதெல்லாம் ஏஜிஆரின் பெயர் கேட்கும். திரையில் அவர் இல்லாமலே இருப்பது போல் இயக்குனர் வழங்கியுள்ளார். முதல் பாதி முடிவடையும் போது இரண்டாம் பாதியில் ஏஜிஆரின் ஆவேசத்தை ஆவலுடன் எதிர்பார்த்தோம். கண்டிப்பாக பத்து தல பிளாக்பஸ்டர் ஹிட்.

simbu-pathu-thala

பெரும்பாலான ரசிகர்கள் முதல் பாதியில் கௌதம் கார்த்திக் நடிப்பு நன்றாக இருக்கிறது என்றும், சிம்பு இடைவெளிக்குப்பின் வந்தாலும் சம்பவம் செய்திருக்கிறார் என்று தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் சிம்புக்கு ஹாட்ரிக் வெற்றியை பத்து தல படம் கொடுக்க உள்ளது.

Also Read : விஜய் , அஜித்தால் வந்த பிரச்னை.. சிம்புவுக்கு கண்டிஷன் போட்ட உதயநிதி

Trending News