தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி தமிழில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகி தளபதி ரசிகர்களை குதூகல படுத்தியது. இந்நிலையில் வாரிசு திரைப்படம் நேற்று ஹிந்தியில் ரிலீஸ் ஆகி பாலிவுட் ரசிகர்களையும் குஷிப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இன்று தெலுங்கிலும் வாரிசு ரிலீஸ் ஆகி உள்ளது. இதனால் தெலுங்கு ரசிகர்கள் அதிகாலை முதலே படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் சோசியல் மீடியாவிலும் அனல் பறக்கும் ட்விட்டர் பதிவுகளை பதிவிடுகின்றனர்.

வாரிசு படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டிருக்கும் இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். மேலும் வாரிசு படம் ரிலீஸ் ஆகும் இதே சமயத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஜனவரி 12 ஆம் தேதியும், சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படம் ஜனவரி 13-ஆம் தேதியும் வெளியாகி இருக்கிறது.
இதனால் தெலுங்கில் இருக்கும் இந்த பெரும் புள்ளிகளுக்கு போட்டியாக வாரிசு ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தைக் குறித்த நல்ல விமர்சனங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் முதல் பாதி எதிர்பார்த்ததை விட மிக அருமையாக எடுத்திருக்கின்றனர்.

மேலும் இந்த படம் ஃபேமிலி ஆடியன்ஸை வேற லெவலில் கனெக்ட் ஆக்கி உள்ளது. பொங்கல் பண்டிகையை திரையரங்குகளில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு வாரிசு திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் என்றும் தெலுங்கு ரசிகர்கள் விமர்சித்திருக்கின்றனர்.

மேலும் தமிழில் எப்படி தளபதி ரசிகர்களிடம் ரெஸ்பான்ஸ் கிடைத்ததோ அதே அளவிற்கு தெலுங்கிலும் வாரிசு படத்திற்கு டிக்கெட்கள் ஹவுஸ்புல் ஆனதுடன், அட்வான்ஸ் புக்கிங்கும் கலைக்கட்டி உள்ளது. மேலும் வாரிசு தெலுங்கில் ஜனவரி 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்து அதன் பின் இன்று தாமதமாக ரிலீஸ் ஆனாலும் படத்தின் ஓபனிங்கில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

கோலிவுட்டை போலவே தெலுங்கிலும் விஜய் கண்சிஸ்டெண்சி ஹீரோவாக உருவெடுத்து இருக்கிறார். மேலும் தமிழ் ஹீரோ விஜய் என்ற பாகுபாடு இல்லாமல் டோலிவுட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வாரிசு படத்தின் மூலம் பூர்த்தி செய்து அவர்களது மனதில் குடி கொண்டிருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.