Chandramukhi 2 Twitter Review: 800 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸில் பெரும் சாதனையை நிகழ்த்திய சந்திரமுகி தற்போது இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டு வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு நிஜ சந்திரமுகியே இதன் மூலம் தரிசனம் கொடுத்திருக்கிறார்.

பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் பற்றிய தங்கள் விமர்சனங்களை ரசிகர்கள் இப்போது ட்விட்டரில் வெளியிட்டு வருகின்றனர். அதில் பெரும்பாலான கருத்துக்கள் வைகை புயலின் காமெடி அலப்பறையை பற்றியதாகத் தான் இருக்கிறது.
Also read: மார்க் ஆண்டனி பயத்தால் சந்திரமுகி 2 ரிலீஸ் தள்ளிப் போச்சா?. பெரிய உருட்டாக உருட்டிய பி வாசு
மேலும் முதல் பாகம் கலகலப்பாகவும், இடைவேளை காட்சி ட்விஸ்டாகவும் இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதிலும் ராகவா லாரன்ஸ் வழக்கம் போல் தெறிக்க விட்டிருக்கிறார். ஆனால் இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருக்கிறது கங்கனாவின் நடிப்பு.

ஏற்கனவே ட்ரெய்லரிலேயே எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த அவர் இப்போது மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்திருக்கிறார். அதே போன்று மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து இருக்கின்றனர்.

Also read: சைக்கோ கொலைகாரனோடு மோதும் சந்திரமுகி 2.. மரண பீதி கண்ணுலயே தெரியுது மாஸ்டர்
அதனாலேயே இப்போது சந்திரமுகி 2-க்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் முந்தைய பாகத்தின் சாதனையை இப்படம் முடித்து காட்டுமா என்பதை அடுத்தடுத்த நாட்களின் வசூலை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
