சமீபகாலமாக பாலிவுட்டில் படங்கள் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் பாய்காட் செய்து விடுகிறார்கள். இதனால் பாலிவுட்டில் உள்ள பெரிய நடிகர்களின் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக ஷாருக்கானின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இன்று அவருடைய நடிப்பில் பதான் படம் வெளியாகி உள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் மற்றும் வில்லனாக ஜான் ஆபிரகாம் நடிப்பில் பதான் படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று வெளியாகி சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதாவது தீபிகா படுகோன் அணிந்து இருந்த பிகினி ஆடை இணையத்தில் பேசு பொருளாக மாறியது.
Also Read : பாலிவுட்டை மீட்டெடுக்க வரும் ஷாருக்கானின் பதான்.. பல கோடியில் நடந்த முன்பதிவு கலெக்ஷன்
இந்நிலையில் பதான் படம் வெளியாவதற்கு முன்பே முன்பதிவுகளில் பல கோடி லாபம் பார்த்தது. அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் 100 நாடுகளில் 7500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பதான் படம் வெளியாகி உள்ளது. இப்போது படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

பதான் படம் இமாலய அளவு பிளாக் பஸ்டர் ஹிட் என்றும் படம் முழுக்க ஆக்சன், ட்விஸ்ட் என முழுமையான பொழுதுபோக்கு வாய்ந்த படமாக அமைந்துள்ளதாகவும், ஷாருக்கான் தன்னுடைய வசீகரமான தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்து உள்ளதாகவும் ட்விட்டரில் தங்களது கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

Also Read : ஷாருக்கானுக்காக விஜய் வெளியிட்ட பதான் பட ட்ரெய்லர்.. பாலிவுட் மலைபோல் நம்பி இருக்கும் படம் ஜெயிக்குமா?
மேலும் பதான் படம் இடைவெளி வரை தடுமாற்றமாக இருந்தாலும் அதன் பின்பு வேகமாகவும் ஆக்சன் நிறைந்ததாகவும் எடுக்கப்பட்டிருந்தது. ஷாருக்கானின் ஆக்சன் காட்சிகள் தியேட்டரை மாற்றியது. அப்படி பயங்கரமான பொழுதுபோக்கு படமாக பதான் படம் உள்ளது. மேலும் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் ஹிட் பதான் படம் என்றும் பாலிவுட்டை தூக்கி நிறுத்தி உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

பதான் படம் அட்வான்ஸ் புக்கிங்கில் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதற்கு முன்னதாக ஹிந்தி மற்றும் பாலிவுட்டில் டப் செய்து வெளியான படங்களில் இந்த அளவுக்கு எந்த படமும் வசூல் செய்யவில்லை. அதுமட்டுமின்றி பாகுபலி 2 மற்றும் கே ஜி எஃப் 2 வசூலை பதான் படம் முறியடித்துள்ளது.


Also Read : ஷாருக்கான் மகளை வளைத்துப் போட்ட சூப்பர் ஸ்டாரின் மகன்.. பின்னணியில் இருக்கும் காரணம்