Shankar : சினிமாவில் ஹீரோக்கள் பல வருடங்களாக கதாநாயகனாகவே நடித்து வரும் நிலையில் கதாநாயகிகளுக்கு குறிப்பிட்ட காலம் வரை தான் மார்க்கெட் இருக்கும். இயக்குனர்களுக்கும் அப்படிதான் என்ற நிலைமை இப்போது வந்துவிட்டது.
அதாவது 90 காலகட்டத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர்களில் பலர் இப்போது இல்லை. அப்படியே சிலர் இருந்தாலும் அவர்கள் எடுக்கும் படம் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை.
இளம் இயக்குனர்களான அட்லீ, நெல்சன், லோகேஷ் கனகராஜ் போன்றோரின் படங்கள் தான் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில் பழைய இயக்குனர்களில் ஷங்கர் சமீபகாலமாக தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்து வருகிறார்.
பிளாக்பஸ்டர் கொடுக்கும் இரண்டு இயக்குனர்கள்
விக்ரமின் ஐ படத்தில் தொடங்கி இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்போது பெரிதும் நம்பி இருக்கும் படம் இந்தியன் 3 தான். ஆனால் இப்போதும் இரண்டு இயக்குனர்கள் ஹிட் கொடுத்து இருக்கின்றனர்.
அதாவது மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இப்படம் கிட்டத்தட்ட 500 கோடி தாண்டி வசூல் செய்தது. அதேபோல் சுந்தர்சியும் இப்போது ஃபுல் ஃபார்ம்யில் இறங்கி இருக்கிறார்.
அவருடைய அரண்மனை 3, மதகதராஜா ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. கேங்கர்ஸ் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுக்கிறார்.