ஒரே நேரத்தில் ஒரே நடிகையை காதலித்த இரண்டு நடிகர்கள்.. கடைசில ரெண்டு பேருக்குமே டாட்டா காட்டிட்டாங்க!

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்குள் காதல் கதைகள் வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஒரே நேரத்தில் பல நடிகர்கள் காதலிப்பது என்பது அரிதான விஷயம்தான். அப்படியே ஒரு விஷயமும் நம்ம தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.

ஒரு காலத்தில் இளைஞர்களை ஆட்டிப் படைத்த நடிகை ஹீரா. கவர்ச்சியாக நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர். தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் முக்கிய நடிகையாக வலம் வந்தார்.

பார்த்தவுடனே ஆசை வரும் போல் இருக்கும் நடிகை ஹீராவை பார்த்தால் யாருக்குத்தான் காதல் வராது. அப்படி ஹீரோவின் மீது தீராத காதல் கொண்டவர் தான் தல அஜித். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர் என்பதும் உலகம் அறிந்த செய்திதான்.

ஆனால் அஜித் வளர்ந்து வரும் நடிகராக இருந்தபோது அந்த காலகட்டத்தில் டாப் நடிகராக வலம் வந்தவர் தான் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். அஜித்தை விட அதிக பேரும் புகழும் கொண்ட நடிகராக வலம்வந்தார்.

அப்போது சரத்குமாருக்கும் நடிகை ஹீராவின் மீது காதல் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரில் யார் ஹீரோவை திருமணம் செய்து கொள்வது என்பதில் இருவருக்குமே பலத்த மோதலும் உரசலும் இருந்ததாக பத்திரிகையாளரான வலைப்பேச்சு அந்தனன் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிறகு அஜித் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரையுமே ஹீரா திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதும், தற்போது வரை திருமணமே வேண்டாம் என்றும் தனிமையில் ஹீரா வாழ்ந்து வருவதும் குறிப்பிட வேண்டியது. இதில் சரத்குமாரை வெறுப்பேற்ற வேண்டுமென்றே ஹீராவை காரில் வைத்துக்கொண்டு சரத்குமாரின் படப்பிடிப்பு அருகே தல அஜித் சுற்றி வருவாராம். இதையும் அவர்தான் குறிப்பிட்டுள்ளார்.

heera-cinemapettai
heera-cinemapettai