திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித் பிறந்தநாளுக்கு வெளிவந்த இரண்டு பிளாக்பஸ்டர் படங்கள்.. புது வில்லன் அவதாரத்தில் போட்ட அஸ்திவாரம்

அண்மையில் அஜித்தின் பிறந்த நாளை ஒட்டி விடாமுயற்சி படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்போஸ்டர் ரசிகர்களிடையே பல எதிர்பார்ப்புகளை கொண்டு வரும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் பல வெற்றி படங்களை கொடுத்து வரும் இவருக்கு ஆரம்ப காலத்தில் கை கொடுத்தது நிக் ஆர்ட்ஸ். மேலும் அஜித்தின் பிறந்தநாள் அன்று அவரிடமிருந்து சர்ப்ரைஸ் பெறுவது அவரின் ரசிகர்களுக்கு வழக்கமாகிவிட்டது.

Also Read:ஏகே 62 டைட்டிலால் கிடைத்த ஏமாற்றம்.. ரவுண்டு கட்டி கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

அவ்வாறு அஜித் பிறந்தநாளுக்கு வெளிவந்த இரண்டு பிளாக்பஸ்டர் படங்கள் என்னென்னவென்று இங்கு பார்க்கலாம். 1999ல் வெளிவந்த வாலி படத்தை எஸ் ஜே சூர்யா இயக்கியிருப்பார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் அஜித்.

மேலும் இவர் தன் பிறந்தநாள் அன்று இப்படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் இப்படத்தை ஏப்ரல் 30 அன்றே நிக் ஆர்ட்ஸ் வெளியிட்டது ரசிகர்களை வேதனைப்படுத்தியது. இருப்பினும் இவருக்கு இந்தப் படம் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. மேலும் அஜித்தின் பிளாக்பஸ்டர்  படங்களில் இதுவும் ஒன்றாகும்.

Also Read:95 கிலோ எடையின் சீக்ரெட்.. அஜித்துக்கு தலைவலியாக இருக்கும் பிரச்சனை

அதேபோல் 2000ல் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் காதல் நாயகனாக வலம் வந்திருப்பார் அஜித். இப்படம் இவருக்கு புதிய அஸ்திவாரத்தை உருவாக்கித் தந்தது. இருப்பினும் இப்படம் தன் பிறந்தநாளுக்கு வெளியாகும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் இவரின் இப்படம் நான்கு நாள் கழித்து தாமதமாக மே 5 ரிலீஸ் ஆனது.

இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை உடைக்கும் விதமாக இருந்தாலும் அஜித்திற்கு பிளாக்பஸ்டர் படமாக ஹிட் கொடுத்தது. மேலும் குறிப்பாக இவர் மேற்கொண்ட புது முயற்சியான வில்லன் கதாபாத்திரம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:ஏகே 62 டைட்டில் வெளியானது.. மீண்டும் வி சென்டிமென்டில் சிக்கிய அஜித்

Trending News