திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

ஆண்டவருக்கு போட்டியாக மிரட்டும் இரண்டு கதாபாத்திரங்கள்.. பட்டையை கிளப்பும் விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்தப் படத்தை காண பல மாதங்களாக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் தற்போது படத்தை பார்த்துவிட்டு சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கும் மேல் ஆண்டவரை திரையில் காணாத ரசிகர்கள் தற்போது அவருடைய மாஸ் என்ட்ரியை பார்த்து புல்லரித்துப் போய் உள்ளனர். வழக்கமாக கமலின் நடிப்பை பற்றி சொல்ல வார்த்தைகளே கிடைக்காது. அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு எதார்த்தமாகவும், தத்ரூபமாகவும் இருக்கும்.

அதிலும் இந்தப் படத்தில் ரசிகர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவருடைய நடிப்பு அசுரத்தனமாக இருப்பதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அவருக்குப் போட்டியாக பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் தங்களுடைய வில்லத்தனத்தால் மிரட்டியிருக்கிறார்கள்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பகத் பாசில் தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத வில்லன் நடிகராக மாறியிருக்கிறார். அந்த வகையில் இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு பகத் பாசில் தமிழில் பிசியான நடிகராக மாறவும் வாய்ப்புள்ளது.

மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் பவானி கதாபாத்திரத்தில் மிரள வைத்த விஜய் சேதுபதி இந்த படத்தில் தன்னுடைய வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்துள்ளார். அதிலும் ஆட்டோவிலிருந்து சட்டையில்லாமல் என்ட்ரி கொடுக்கும் அந்த காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

அந்த வகையில் முதல் காட்சியை பார்த்து முடித்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் விக்ரம் திரைப்படத்தை மீண்டும் மீண்டும் காணும் ஆவலில் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். ஆக மொத்தத்தில் விக்ரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆக ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.

Advertisement Amazon Prime Banner

Trending News