புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஓய்வு பெறும் முடிவில் நட்சத்திர வீரர்.. ஸ்ரேயஸ், சூர்யாவால் ராம் லக்ஷ்மணனுக்கு பறிபோன வாய்ப்பு

ஒரு காலகட்டத்தில் டெஸ்ட் அணி என்றால் இந்த இருவர் இல்லாமல் இந்திய அணி எந்த ஒரு தொடருக்கும் செல்லாது. ஆனால் இவர்கள் இருவருக்கும் இப்பொழுது வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இருவருமே ஓய்வு பெரும் முடிவுக்கு வந்து விட்டனர்.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கும் போதே மிகவும் ஆமை போல் விளையாடுகிறார்கள் என இரண்டு வீரர்களை இந்திய அணியில் இருந்து இப்பொழுது வரை ஒதுக்கி வைத்து இருக்கின்றனர். டெஸ்ட் போட்டிகளுக்கென தற்சமயம் பிரத்தியேக அணியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயஸ் ஐய்யர் இருவரும் இப்பொழுது இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி வருகின்றனர். முன்பு அஜிங்கே ரகானே மற்றும் சட்டீஸ்வர் புஜாரா இந்திய டெஸ்ட் அணியில் நீங்காத இடம் பெற்று விளையாடி வந்தனர். இப்பொழுது அவர்களுக்கு உண்டான வாய்ப்பு முழுவதுமாக மறுக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரேயஸ், சூர்யாவால் ராம் லக்ஷ்மணனுக்கு பறிபோன வாய்ப்பு

தற்சமயம் ரகானே உள்ளூர் போட்டிகளில் தன்னுடைய முழு திறமையும் காண்பித்து விளையாடி வருகிறார். அங்கே அவரது 40 வது முதல் தர டெஸ்ட் போட்டி சரத்தை அடித்துள்ளார். இந்த சதம் அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பைப் பெற்றுத் தருமா என்பது பல பேருடைய கேள்வியாக இருக்கிறது.

இந்திய அணியில் அவரது வாய்ப்பு பறிபோனதற்கு முக்கிய காரணம் அவரது குறைந்தபட்ச சராசரி தான். வெறும் 38 என்கிற அளவில்தான் அவரது ஆவரேஜ் இருந்து வந்தது. ஒரு காலகட்டத்தில் இந்திய வீரர்கள் வெளிநாட்டு மண்ணில் ரன்கள் குவிக்க தினறி வரும்பொழுது ஆபத் பாண்டவனாக செயல்பட்டது ரஹானே மற்றும் புஜாரா தான். தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்ததால் இப்பொழுது ரஹானே ஓய்வு பெறும் முடிவை எடுத்து விட்டாராம்.

Trending News