செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லோகேஷ் கனகராஜுக்கு போட்டியாக களமிறங்கிய இரண்டு இயக்குனர்கள்.. ஏகே 62 படத்தின் விறுவிறு அப்டேட்

இயக்குனர் லோகேஷ் கனகாரஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி சக்கைப் போடு போட்ட நிலையில் இந்தாண்டு அக்டோபர் 19 அன்று இப்படம் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன், மாஸாக இருந்த இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

சிங்கம், கழுகு, பாம்பு, தேள் என லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் லியோ பட ப்ரோமோவில் வேற லெவலில் காட்டப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களான விக்ரம், கைதி படத்தின் தொடர் கதையாக இப்படம் உருவாக உள்ளதால், லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் லியோ படத்திற்கு போட்டியாக அஜித்தின் ஏகே 62 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

Also Read: ஏகே 62-வில் மகிழ் திருமேனிக்கு போட்டியாக வந்த மாஸ் இயக்குனர்.. லியோவை டார்கெட் செய்து லைக்கா போடும் திட்டம்

அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், தற்போது அவர் விலக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவார் என்றும் அவர் கூறிய கதை அஜித் மற்றும் லைகா நிறுவனத்திற்கு பிடித்ததாகவும் தெரிவித்தனர். மேலும் ஏகே 62 படம் விஜய்யின் லியோ படத்துடன் தீபாவளியன்று ரிலீஸ் செய்ய வேண்டுமென அஜித் முனைப்புடன் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதன் காரணமாக லோகேஷ் கனகராஜுக்கு டப் கொடுக்க வேண்டி தற்போது புது இயக்குனர் ஏகே 62 படத்தில் இணைந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குவார் என்பது 99 சதவிகிதம் முடிவான நிலையில், ஏகே 62 படத்தில் இரண்டாவதாக ஒரு இயக்குனர் அறிமுகமாகவுள்ளார். அஜித்தின் 61 படங்களிலேயே இப்படத்தில் தான் முதன்முதலாக 2 இயக்குனர்கள் வேலை செய்யப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: வசூல் மன்னனை பின்னுக்கு தள்ளிய ஏகே.. தளபதி 67, ஏகே 62 படங்களில் அஜித், விஜய்யின் சம்பளம்

ஏகே 62 படத்தின் கதை லோகேஷ் கனகராஜின் லியோ படத்தின் கதையை ஓவர்டேக் செய்யும் வகையில் இருக்க வேண்டுமென, அப்படக்குழு தீர்மானித்துள்ளது. இதனிடையே ஏகே 62 படத்தின் கதையை இயக்குனர் மித்ரன் எழுத உள்ளதாக செய்திகள் வெளியாகி வைரலாகியுள்ளது. கடந்தாண்டு இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான சர்தார் படம் சமூக கருத்துடன் வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் அஜித்தின் படங்களில் சமூக கருத்துக்கள் உள்ள கதைகளுக்கு அஜித் அதிகம் முக்கியத்துவம் தரும் வகையில் நடித்து வருவதால் மித்ரனின் கதைக்களம் அஜித்திற்கு பிடித்தார் போல் இருக்கும் என்றும், அதுமட்டுமில்லாமல் மகிழ் திருமேனியின் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இயக்கம் அஜித்திற்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்க்கப்பட்டுள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மித்ரனின் கதைக்களம் லோகேஷ் கனகராஜின் கதையோடு போட்டிப் போடும் அளவிற்கு மோதுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: 90% உறுதியான ஏகே 62.. பிரம்மாண்ட பட்ஜெட்டுடன் ரிலீஸ் தேதியை லாக் செய்த அஜித் படக்குழு

Trending News