வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சாய் பல்லவி காதல் கருமத்தை செய்யாமல் இருக்க இவர் தான் காரணம்.. தவறாகப் பேசிய 2 ஹீரோக்கள்

Sai Pallavi: சினிமா பிரபலங்களையும் கிசுகிசுக்களையும் பிரிக்கவே முடியாது. ஆனால் இதில் விதிவிலக்காக சிலர் கிசுகிசுகளில் சிக்காமலும் இருக்கிறார்கள். அவ்வாறு தான் நடிகை சாய் பல்லவியும் தற்போது வரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வருகிறார். இதற்கு காரணம் அவருடைய பழக்க வழக்கம் தான்.

சின்னத்திரையில் இருந்த வெள்ளித்திரைக்கு வந்த சாய்பல்லவிக்கு நடிப்பு, நடனம் இரண்டுமே கைவந்த கலை. அதுமட்டுமின்றி சாய்பல்லவியை பிடிக்காத ஹீரோக்கள் என்று யாரும் இல்லை. ஏனென்றால் தான் உண்டு தன் வேலை உண்டு என படப்பிடிப்பு தளத்தில் இருக்கக்கூடியவராம்.

Also Read : தொடர் ஹிட்படங்கள் கொடுத்தும் பிரயோஜனம் இல்லை.. புலம்பி வரும் சாய்பல்லவி

மேலும் தேவையில்லாமல் யாரிடமும் பேச மாட்டாராம். படம் சம்பந்தமாக மட்டுமே பேசக்கூடியவர். அதுமட்டுமின்றி தனக்கென சிறு கட்டுப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறார். அதாவது ஓவரான கிளாமர் உடை, கவர்ச்சி, லிப் லாக் சீன் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார்.

மேலும் சாய் பல்லவி இவ்வாறு இருக்க அவருடைய குணம் ஒருபுறம் காரணமாக இருந்தாலும், அவரது அப்பா முக்கிய காரணமாம். அதாவது நீ சினிமாவில் நடித்தாலும் காதல் கருமத்தை எல்லாம் செய்து விடக் கூடாது. நம்முடைய இனத்தைச் சேர்ந்த ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறாராம்.

Also Read : விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தூக்கி எறிய சாய்பல்லவி கூறிய காரணம்.. வாய்ப்பில்ல என்றாலும் வாய்க்கொழுப்பு அதிகம்

இது சாய் பல்லவியின் மனதில் ஆழமாக பதிந்ததால் எந்த ஒரு ஆண்களுடனும், கதாநாயகர்களுடனும் தனது எல்லையை மீறி எதுவும் நடந்து கொள்ளமாட்டாராம். இவர் ஹீரோக்களுடன் அதிகம் பேசாமல் இருப்பதால் சில கதாநாயகர்கள் சாய் பல்லவியை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் நானி மற்றும் நாக ஷௌர்யா இருவரும் சாய் பல்லவியை தவறாக நினைத்து விட்டனர்.

அதாவது அவரின் அமைதியை பார்த்துவிட்டு திமிர் பிடித்த பெண் என்றும் இவள் மட்டும் தான் உலகில் அழகு என்று நினைப்பதாக சொல்லி பொது வழியில் அவமானப்படுத்தி பேசியுள்ளனர். ஆனால் அதற்கும் சாய் பல்லவி கோபப்படாமல், தெரியாமல் தவறு செய்தால் என்னை மன்னித்து விடுங்கள் என மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

Also Read : டாக்டர் பணியை விட்டுவிட்டு அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகர்.. சாய் பல்லவியை போல இருக்கும் மருத்துவர்

Trending News