வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய், ஒரே கதையில் வெளியான 5 படங்கள்.. விஜய் படத்தை அட்ட காப்பி அடித்த ரஜினி

5 films released in the same story: கதை ஒன்னு தான் ஆனால் படங்கள் தான் வேறு வேறு என்று சொல்வதற்கு ஏற்ப ஒரே கதையில் இரண்டு படத்தை வைத்து ஓட்டி இருக்கிறார்கள். அப்படி ஒரே கதையை வைத்து வெளியான ஐந்து படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

பூவெல்லாம் கேட்டுப்பார் VS ஜோடி: இந்த இரண்டு படங்களிலும் ஹீரோ ஹீரோவை காதலித்த பின்பு வீட்டின் சம்பந்தத்துடன் கல்யாணம் பண்ண வேண்டும் என்று முடிவு பண்ணுகிறார்கள். அந்த வகையில் ஹீரோ ஹீரோயின் வீட்டுக்கு போவதும், ஹீரோயின் ஹீரோ வீட்டுக்கு போயி அவர்கள் மனதில் இடம் பிடிப்பதுமாக கதை இருக்கும். அப்படி ஹீரோயின் வீட்டிற்கு ஹீரோ சென்ற நிலையில் எப்படி பெற்றோர்களின் சம்மதத்தை வாங்குகிறார்கள் என்பது தான் படமாக எடுக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டு படமுமே 1999 ஆம் ஆண்டு ஒரு மாத இடைவெளியில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள்தான்.

குட் நைட் VS DEAR: இரண்டு படங்களுமே குறட்டை பிரச்சினையை தான் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. குட் நைட் படத்தில் மணிகண்டன் குறட்டை விடுவதால் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. அதே மாதிரி ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த டியர் படத்தில் குறட்டை பிரச்சினையால் ஜீவி அவஸ்தைப்படும் அளவிற்கு ஒன்று போல தான் கதை இருக்கிறது.

ஆயிரம் ஜென்மங்கள் VS அரண்மனை: இந்த இரண்டு படத்தின் கதை ஆனது ஹீரோவின் தங்கை காதல் திருமணம் செய்து கணவருடன் ஒரு அரண்மனையில் குடியேறுகிறார்கள். அந்த சமயத்தில் அங்கு இருக்கும் அமானுஷ்ய சக்திகள் சில சம்பவங்களை செய்கிறது. ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படத்தை தான் பல வருடங்களுக்குப் பின் சுந்தர்சி ஆட்டையை போட்டு அரண்மனை படமாக கொடுத்திருக்கிறார்.

திருப்பாச்சி VS அண்ணாத்த: அதாவது ஹீரோ உடைய தங்கைக்கு திருமணம் ஆன நிலையில் தங்கை வாக்கப்பட்டு போன ஊரில் தங்கைக்கு ஏற்படும் பிரச்சினையை சரி செய்து தங்கை நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான் கதையாக எடுக்கப்பட்டிருக்கும். அதிலும் தங்கைக்கு தெரியாமலேயே தங்கையின் பிரச்சனைகளை சரி செய்யும் விதமாக ஹீரோக்கள் மாஸ் காட்டி இருப்பார்கள். மேலும் 2005 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ரஜினி, அண்ணாத்த படத்தில் நடித்தார். இப்படம் ரஜினிக்கு கை கொடுக்காமல் தோல்வி அடைந்து விட்டது.

ஜில்லுனு ஒரு காதல் VS தீராக் காதல்: முதல் காதல் தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவதாக கல்யாணம் பண்ணி மனைவி குழந்தை என ஹீரோ மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில் திடீரென்று ஹீரோ வாழ்க்கையில் குறுக்கிடும் முன்னாள் காதலி. இதனால் ஏற்படும் சலசலப்பு தான் இந்த இரண்டு படங்களின் கதை. அந்த வகையில் 2006 ஆம் ஆண்டு வெளியான ஜில்லுனு ஒரு காதல் படம் தற்போது வரை அனைவரது பேவரட் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தை அட்டகாப்பி அடிக்கும் அளவிற்கு கடந்த வருடம் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தீராக் காதல் வெளிவந்தது.

Trending News