வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தியேட்டர்ல மிஸ் பண்ண 2 தரமான படங்கள், இப்ப ஓடிடி-யில் மிஸ் பண்ணிடாதீங்க.. லாபத்தில் தெறிக்கவிடும் நிறுவனங்கள்

OTT Platform : இப்போது தியேட்டரில் படத்தை பார்ப்பதை காட்டிலும் ஓடிடியில் பார்ப்பது ரசிகர்களுக்கு மிகவும் ஏதுவாக இருக்கிறது. பெரும்பாலும் இப்போது வெள்ளிக்கிழமை ஆனால் இரவு பொழுது ஓடிடியில் தான் பலரும் நேரத்தை கழித்து வருகிறார்கள்.

இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட முன்னணி ஓடிடி நிறுவனங்கள் பெரிய நடிகர்களின் படங்களை வாங்கி விடுகின்றனர். இதன் மூலம் அவர்கள் நல்ல லாபத்தையும் தொடர்ந்து பெற்று வருகிறார்கள். அவ்வாறு தியேட்டரில் தரமான இரண்டு படங்களை பார்க்க மிஸ் பண்ணி இருந்தால் இப்போது ஓடிடியில் அதை பார்க்கலாம்.

அமேசான் ப்ரைமில் மிஷன் சாப்டர் ஒன்

அருண் விஜய்யின் அசாத்தியமான நடிப்பில் உருவான மிஷன் சாப்டர் ஒன் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். வித்யாசமான கதையாக அப்பா, மகள் இடையேயான பாசம் மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் இப்படம் உருவாகி இருந்தது.

வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் அருண் விஜய் உடல்நிலை குறைபாடு உள்ள தனது மகளை காப்பாற்ற எவ்வாறு முயற்சியை மேற்கொள்கிறார் என்பதுதான் மிஷன் சாப்ட்வேர் ஒன். இப்போது இந்த படம் ஓடிடியிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

சோனி லைவில் பிரமயுகம்

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டியின் மிரளவிடும் நடிப்பில் வெளியாகி இருந்த படம் தான் பிரமயுகம். மலையாளம் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்து இருந்தது. 19ஆம் நூற்றாண்டு கதையை வைத்து கருப்பு வெள்ளையாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

பாழடைந்த அரண்மனையில் மம்முட்டி இடம் மாட்டிக்கொள்ளும் தேவன் அங்கிருந்து வெளியில் செல்ல என்ன முயற்சி செய்கிறார் என்பது தான் பிரமயுகம். மேலும் அந்த அரண்மனையின் வரலாறையும் படத்தில் காட்டி இருக்கின்றனர். இப்போது இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

Trending News