சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பிக் பாஸ் நிகழ்ச்சியால் அந்தரத்தில் ஊசலாடும் ரெண்டு சீரியல்.. டிஆர்பிக்காக உள்குத்து வேலையை பார்க்கும் விஜய் டிவி

Vijay Tv: விஜய் டிவி பொருத்தவரை எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு தான் மக்கள் ஆவலாக காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் எதிரும் புதிருமாக இரண்டு நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. ஒன்று பிக் பாஸ் மூலம் சண்டை சச்சரவுகளை காட்டி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக மக்களை கவர்ந்து விடும்.

இன்னொன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மன அழுத்தத்தில் இருக்கும் மக்களை ரிலாக்ஸ் பண்ணும் விதமாக காமெடி கலாட்டா செய்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறது. ஆனால் தற்போது இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே மக்களிடம் கொஞ்சம் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறது. அதனால் இதை சரிகட்டும் விதமாக தற்போது பிக் பாஸ் சீசன் 8 ஆரவாரத்துடன் விஜய் சேதுபதி வைத்து தொடங்கப் போகிறது.

முக்கிய சீரியலின் நேரத்தை மாற்ற போகும் விஜய் டிவி

அந்த வகையில் வருகிற அக்டோபர் ஆறாம் தேதி மாலை 6 மணியிலிருந்து துவங்கப் போகிறது. அப்பொழுது விஜய் சேதுபதி வழக்கம் போல் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் விதமாக 18 போட்டியாளர்களை கொண்டு வரப் போகிறார்கள். ஆனால் எப்பொழுதுமே பிக் பாஸ் நிகழ்ச்சி இரவு 9.30 மணிக்கு தான் ஒளிபரப்பு செய்வார்கள்.

இந்த நேரத்தில் சின்ன மருமகள் மற்றும் நீ நான் காதல் இந்த இரண்டு சீரியல்களும் ஒளிபரப்பாகி வருவதால், தற்போது இதனுடைய நேரத்தை மாற்றலாமா அல்லது மதிய நேரத்திற்கு போடலாமா என்ற யோசனையில் அந்தரத்தில் ஊசல் அடி வருகிறது. ஆனால் சின்ன மருமகள் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்து வருவதால் அதை மதிய நேரத்தில் ஒளிபரப்பு செய்தால் ரொம்பவே அடிபட்டு விடும்.

அதனால் வழக்கம்போல் விஜய் டிவியில் பிக் பாஸ் வருகிறது என்றால் 6 மணி மற்றும் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியலை தான் மதியத்துக்கு மாற்றுவார்கள். அந்த வகையில் பனி விழும் மலர்வனம் சீரியல் 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அதே மாதிரி வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலும் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த இரண்டு சீரியல்களையும் மதிய நேரத்தில் மாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் பணிவிலும் மலர்வணம் சீரியல் தற்பொழுது தான் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. மக்களின் பேவரைட் சீரியலாக மாறிய நிலையில் மாற்றினால் சில குளறுபடிகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியால் இரண்டு சீரியல்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பாக்கியலட்சுமி சீரியல் கதையே இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பதால் அதை சீக்கிரமாக முடித்து விடுங்கள் என்று மக்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

Trending News