வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

2 சூப்பர் ஸ்டார்கள் மிஸ் ஆன அஜித் 61.. பவர்ஃபுல் செகண்ட் ஹீரோ ரோல் யாருக்கு

எச் வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி போட உள்ளார் அஜித். வலிமை படம் பிப்ரவரியில் வெளியாக உள்ள நிலையில் அஜித்தின் 61 ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.

அஜித் 61 படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடக்க உள்ளது. இதற்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வேலைகள் முடிந்தவுடன் மிக விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

ஏ கே 61 படத்தில் அஜித் மங்காத்தா படத்தை போல் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித்துக்கு இணையான கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

அந்த வலுவான கதாபாத்திரத்திற்கு மோகன்லால், நாகார்ஜூன் இருவரையும் படக்குழு அணுகி உள்ளது. அஜித் 61 படக்குழு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கால்ஷூட்டிங் கேட்டுள்ளார்கள். ஆனால் இருவரும் வேறு பல படங்களில் பிஸியாக உள்ளதால் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார்கள்.

இதனால் அஜித்துக்கு இணையான கதாபாத்திரத்தில் வேறு ஒரு வலுவான நடிகரை படக்குழு தேடி வருகிறார்கள். அதேபோல் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தபு நடிக்க உள்ளார் என்ற செய்தியும் வெளியானது.

ஏற்கனவே தபு அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் அஜித் 61 படத்தில் தபு நடிக்கவில்லையாம். இனிமேல் தான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க உள்ளார்கள். கண்டிப்பாக நாம் வியக்கும் அளவில் அந்த நடிகர், நடிகைகள் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Trending News