Actor Vijay: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிற்காகவும் விஜய் வேறு நடிகர்களை பாலோ செய்த விஷயம் இப்போது வெளியாகி இருக்கிறது. விஜய்யின் ஆரம்பகால படங்கள் எதுவும் பெரிய அளவில் ஓடவில்லை.
தனது தந்தை எஸ்ஏசியின் படத்தில் நடித்தாலும் ரசிகர்களால் விஜய் கவரப்படவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய படத்தில் ரஜினியின் சாயல் மற்றும் புகைப்படத்தை காண்பித்தால் விசில் பறக்கும் என்பதை அறிந்து அதுபோல செயல்பட்டு வந்தார் விஜய். வில்லு படம் வரை ரஜினியின் புகழை விஜய் பாடி வந்தார்.
Also Read : நெல்சனிடம் இல்லாத ஒரு திறமை.. லோகேஷ் பக்கம் சாய்ந்த விஜய், காரணம் இதுதான்
இதைத்தொடர்ந்து சினிமாவில் முக்கிய நடிகராக விஜய் உயர்ந்ததால் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரஜினியை காண்பிக்க மறுத்தார். தான் திரையில் வந்தாலே தன்னுடைய படம் வசூலை வாரி குவிக்கும் என்ற நிலைமையை விஜய் ஏற்படுத்தி இருந்தார். அதேபோல் ரஜினி படங்கள் தோல்வி ஊற்றாலும் விஜய்யின் படங்கள் வசூலை வாரி குவித்து வந்தது.
மேலும் இதைத் தொடர்ந்து வந்த படங்களில் எம்ஜிஆரின் பாடல்களை வைத்து அவரை நினைவு படுத்தும் விதமாக காட்சிகள் அமைத்தார். இதற்கு காரணம் சினிமாவில் இருந்து அரசியலில் சாதித்து காட்டிய பிரபலங்கள் என்றால் எம்ஜிஆர் தான் முதலிடம். இப்போது விஜய்யும் அரசியலுக்கு வர இருக்கிறார்.
Also Read : தாறுமாறாக உருவாகும் தளபதி 68 கதை.. விஜய்யின் அரசியலுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் வெங்கட் பிரபு
இவ்வாறு ரஜினி மற்றும் எம்ஜிஆர் ஆகியோரை பாலோ செய்து தனது படங்கள் மட்டுமல்லாமல் இப்போது அரசியலிலும் ஆழம் பார்க்க இறங்கி இருக்கிறார் விஜய். ஆரம்பத்தில் ரஜினி ரசிகனாக இருந்து வெற்றி பெற்ற விஜய் இப்போது சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெறுவதற்காக முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.
அதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் பழம் தின்று கொட்டை போட்ட பிரபலங்களின் ஆலோசனையை கேட்டு செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினரை டார்கெட் செய்து ஒவ்வொரு நலத்திட்டங்களை செய்து வருகிறார். மேலும் விஜய் அரசியலுக்கு வருவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
Also Read : தலைவருக்கு கொடுத்த ஜெயிலர் வெற்றி ஏன் விஜய்க்கு கொடுக்கல.. மறைமுகமாக நெல்சன் புலம்பிய காரணம் இதுதான்