புதன்கிழமை, ஜனவரி 1, 2025

சூப்பர் ஸ்டாரையே வியக்க வைத்த 2 வில்லன்கள்.. நடிப்பில் மிரட்டிய கதாபாத்திரங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்னும் அளவிற்கு ஹீரோ, வில்லன் என்று பல கேரக்டர்களிலும் அவர் நடித்துள்ளார். அதிலும் அவர் வில்லனாக மிரட்டிய பல திரைப்படங்கள் ரசிகர்களின் பேவரைட்டாக இருக்கிறது.

ஆனால் சூப்பர் ஸ்டாரையே வியக்க வைக்கும் அளவுக்கு இரண்டு வில்லன்கள் இருக்கின்றனர். பொதுவாக சினிமாவில் ரஜினிக்கு வில்லனாக எத்தனையோ நடிகர்கள் நடித்திருந்தாலும் இந்த இரண்டு பேரின் வில்லத்தனம் மட்டும் இன்னும் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த பாட்ஷா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதில் ஆண்டனி என்ற கேரக்டரில் நடித்திருந்த ரகுவரனின் வில்லத்தனம் கலந்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பராக இருந்த ரகுவரன் அந்த படத்தில் ரஜினியுடன் போட்டி போட்டுக் கொண்டு நடித்தாராம்.

இன்று வரை தமிழ் சினிமாவில் அவருடைய வில்லத்தனத்தை மிஞ்ச ஆளே கிடையாது. அந்த வகையில் ரஜினிக்கு மிகவும் பிடித்த வில்லன்களில் ரகுவரனும் ஒருவர். அதுபோன்று ரஜினிக்கு சவால் விடும் அளவிற்கு நடிப்பில் மிரட்டிய மற்றொருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சிவாஜி, சௌந்தர்யா மற்றும் பலர் நடித்திருந்த படையப்பா திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி என்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார். அந்த படத்தில் ரஜினியை எதிர்த்து அவர் பேசும் வசனங்களும், திமிரான பார்வையும் ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

அந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடிக்க சரியான தேர்வு ரம்யா கிருஷ்ணன்தான் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய நடிப்பு மிரட்டலாக இருந்தது. அப்படிப்பட்ட அவருடைய நடிப்பை ரஜினிகாந்த் மிகவும் வியந்து பார்த்ததாக ஒரு மேடையில் குறிப்பிட்டு பேசியுள்ளார். அந்த வகையில் இவர்கள் இருவரும் தான் இன்றுவரை ரஜினியை வியக்க வைத்த வில்லன்கள் பட்டியலில் முதலில் இருக்கின்றனர்.

Trending News