திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யுடன் போட்டி போட தயங்கிய உதயநிதி.. வைரலாகும் பதிவு

Vijay – Udhayanithi : விஜய் அரசியல் கட்சி தொடங்கியது இப்போது உள்ள அரசியல் கட்சிகள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சில காலமாகவே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தான் மாறி மாறி பதவி வகித்து வருகின்றனர். ஒரு மாற்று அரசியலுக்காக தமிழ்நாடு ஏங்கி கொண்டு தான் இருக்கிறது.

சரியான நேரத்தில் தமிழக வெற்றி கட்சி என்று விஜய் அரசியலில் களம் இறங்கி உள்ளது பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது. இது குறித்து உதயநிதி இடம் கேட்கும் போதும் விஜய் அரசியலில் வந்ததற்கு தன்னுடைய பாராட்டுக்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 13 வருடங்களுக்கு முன்பு, விஜய் அண்ணா கூட போட்டி போட நான் என்ன லூசா என்று உதயநிதி போட்ட பதிவு இப்போது வைரலாகி கொண்டு இருக்கிறது. அதாவது உதயநிதி சினிமாவில் நுழைந்த புதிதில் காமெடி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதுவும் சந்தானத்துடன் அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

Also Read : விஜய், அஜித் மோதும் கடைசி படம்.. மாஸ்டர் பிளான் போட்டு காய் நகர்த்தும் AK

அப்போது விஜய் படத்துடன் உங்கள் படம் போட்டியிடுமா என்று கேட்டதற்கு உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் இதுபோன்று பதிவு போட்டிருந்தார். ஆனால் அந்த பதிவை இப்போது அரசியலில் விஜய் இறங்கியவுடன் இதை வைத்து உதயநிதியை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

விஜய் அரசியலில் இறங்கி உள்ளதால் அவருடன் தேர்தலில் போட்டி போட்டால் நீங்கள் என்ன லூசா என்று உதயநிதியை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். அதுவும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதிய ஆட்சியாக முதலமைச்சர் நாற்காலியில் விஜய் தான் அமர உள்ளார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

vijay-udhayanithi
vijay-udhayanithi

Also Read : விஜய் தம்பியை கூப்பிட்டு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா.? உங்க லெவலுக்கு யாரையும் யோசிக்க கூட முடியல

Trending News