வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மாமன்னனுக்கு பிறகு உதயநிதி நடிக்கும் அடுத்த படம்.. இப்பவே முதலமைச்சராக பார்க்க ஆசைப்பட்ட கமல்

Udhayanidhi Next Movie: சினிமாவில் நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலின் இப்போது முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். அதுவும் அமைச்சர் பதவி கிடைத்ததும் இனிமேல் படங்களில் இரண்டு வருடத்திற்கு நடிக்க மாட்டேன் என உறுதியாக சொல்லி, கடைசி கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.

இப்போது இரண்டு வருட இடைவெளி எடுத்துக் கொண்ட உதயநிதி அடுத்ததாக எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்பதற்கான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மாமன்னன் படத்திற்கு பிறகு உதயநிதி அடுத்ததாக கமல் தயாரிப்பில் உதயநிதி நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென உதயநிதி அமைச்சராகி விட்டதால் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

Also Read: நானும் நடிகன்-டா என கண்ணீர் வரவழைத்த வடிவேலுவின் 6 படங்கள்.. சீரியஸாக நடித்து ரீ என்ட்ரியில் ஜெயித்த மாமன்னன்

நடிக்க மாட்டேன் என்று சொன்னது தற்காலிகமாக தான், கூடிய விரைவில் இந்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர். காரணம் அந்த படத்தின் கதை அப்படிப்பட்டது. இந்தப் படத்தின் கதையில் உதயநிதி முதலமைச்சர் ஆக நடிக்கிறார், அதாவது இந்தப் படம் உதயநிதியின் தந்தை முக ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு படமாகிறது.

இந்த படத்தை இயக்குபவர் கிடாரி மற்றும் வர்த்தகம் படத்தின் இயக்குனர் பிரசாந்த் முருகேசன் என்பது உறுதியாகி உள்ளது. இந்த படத்தை உடனடியாக நடித்தால் நன்றாக இருக்காது என்ற காரணத்தால் சிறிது காலம் பதவியை வகித்து வகித்து விட்டு தேர்தலை சந்தித்து விட்டு இந்த படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்திருக்கிறார் உதயநிதி.

Also Read: யோசிக்காமல் முடிவெடுத்த உதயநிதி.. ரெட் ஜெயண்ட் கை மாறியதால் வந்த வினை

அதனால் இதன் அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளிவரும் என தகவல்கள் வந்துள்ளன. உதயநிதி முக ஸ்டாலினுக்கு பிறகு முதலமைச்சராகவும் மாறிவிடுவார். ஆனால் இப்போதே உதயநிதியை முதலமைச்சராக பார்க்க உலக நாயகன் கமலஹாசன் ஆசை பட்டுள்ளார்.

இந்த ஆசை உதயநிதி மனதிலும் இருப்பதால், நிச்சயம் இந்த படத்தில் நடிப்பார் என்பதால் தான் இப்படி ஒரு கதையை வைத்து படத்தை கமல் தயார் செய்ய போகிறார். இந்த படத்தில் இன்னும் யார் யார் நடிக்கப் போகின்றனர் என்பதற்கான முழு விவரமும் இன்னும் கொஞ்ச நாள் கழித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவரப் போகிறது.

Also Read: மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு ஓபனாக பேசிவிட்டார்.. மொத்தத்திற்கும் அந்த நடிகர் தான் காரணம் என கூறிய உதயநிதி

Trending News