புதன்கிழமை, ஜனவரி 15, 2025

உதயநிதி கூட கிசுகிசுக்கப்பட்ட 4 நடிகைகள்.. நிவேதாவுக்கு முன்பே 3  ஹீரோயின்ஸ்

Udhayanidhi cossip with 4  actresses: தமிழக அரசியலில் துடிப்பு மிக்க  விளையாட்டுத்துறை அமைச்சராக இளைஞர் நலம் காத்து வரும் உதயநிதி ஸ்டாலின், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் ஆவார்.

திரைத்துறையில் கால் எடுத்து வைத்த போது தயாரிப்பு பணியை மட்டும் தான் மேற்கொள்வேன் நடிக்க மாட்டேன் என்று கங்கணம் கட்டியவர்,பின்னாளில் ஆதவன் படத்தின் மூலம் அறிமுகம் கொடுத்து ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் நடிகரானார்.

எளிமையான தோற்றத்துடன் பழகுவதற்கு இனிமையானவரான உதயநிதி கிசுகிசுக்கப்பட்ட 4 நடிகைகள் இதோ,

நயன்தாரா: இது கதிர்வேலன் காதல்,  நண்பேண்டா படங்களில் நடித்த சக நடிகையான நயன்தாராவுடன் நடித்த போது இவர்கள் இருவருக்கும் கனெக்ஷன் என்று கொளுத்தி போட்டனர் எதிர்க்கட்சியினர்.  

இதைக் கேட்டு விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருந்த நயன்தாரா கொல  காண்டானார். வழக்கு தொடுக்கும் அளவிற்கு சென்றார்.

காதல் காட்சியில் நடிக்க பயந்த உதயநிதி

ஹன்சிகா: மனிதன் திரைப்படத்தில் நடித்த போது ஹன்சிகாவுடன் கிசுகிசுக்கப்பட்டார் உதயநிதி. முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்திலும் ஹன்சிகா தான் ஜோடி.

முதல் படம் என்பதால் மிகவும் கூச்சத்துடன் நடித்த உதயநிதி, காதலை ப்ரொபோஸ் பண்ணும் சீனிலும் சந்தானத்தை நண்பனாக, நீங்களே சொல்லிடுங்க என்று கூறினாராம்.

சந்தானம் இயக்குனர் ராஜேஷிடம் “எல்லா டயலாக்கையும்  என்ன பேச சொல்றாரு, ரொம்ப கூச்சப்படுறாரு” என்று கலாய்த்தாராம்.

ரெஜினா கசாண்ட்ரா: சரவணன் இருக்க பயமேன் திரைப்படத்தில் நடித்த போது பாடல் காட்சிகளில் காட்டிய அதிக நெருக்கத்தால் கிசுகிசுக்கப்பட்டது இந்த ஜோடி.  இந்த சர்ச்சைகளைப் பற்றி சட்டை செய்யாமல் பேட்டி ஒன்றில் பேசிய ரெஜினா, உதயநிதியை  ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளினார்.

நிவேதா பெத்துராஜ்: உண்மை என்ன என்பதை அறியாமல் உதயநிதி மற்றும் நிவேதா பெத்துராஜை சரமாரியாக சர்ச்சைக்கு உள்ளாக்கினர் உதயநிதியின் நலம் விரும்பிகள்.

துபாயில் இவருக்கு 50 கோடியில் உதயநிதி வீடு வாங்கி கொடுத்தார் என்றும், மாதம் இருமுறை உதயநிதியை காண வேண்டியே துபாயிலிருந்து சென்னை வருவதாகவும் கொளுத்தி போட்டனர்.  

இதனால் கொதித்து எழுந்த இந்த நடிகை வலைதளத்தில் காரசாரமாக பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News