தளபதி 69 படத்திற்கு விஜய் வாங்கும் சம்பளம் 225 கோடிகள். கடைசி படத்தில் ஒரு மாஸ் சம்பளத்தோடு சினிமாவிற்கு குட் பை போடுகிறார். இந்த படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வைத்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க விஜய் அரசியல் களத்தில் படு பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.
விஜய்க்கு சக போட்டியாளர் அஜித்தோ துபாயில் கார் பந்தயத்தில் வெற்றி பெற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் ஆறு மாதம் ஓய்வுக்கு பிறகு அக்டோபரில் தான் சென்னை திரும்புகிறார். இதனிடையே சிறுத்தை சிவா உடன் அடிக்கடி போனில் பேசி வருகிறார்..
அஜித்தின் அடுத்த பட லைன் அப்பிள் சிறுத்தை சிவா மற்றும் விஷ்ணுவர்தன் இருவரும் இருக்கிறார்கள். விஷ்ணுவர்தன் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட உதயநிதி விஷ்ணுவர்தனையும் அஜித்தையும் இணைத்து மீண்டும் படம் தயாரிக்கும் முடிவில் இருக்கிறார்கள்.
இதனால் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் அஜித்திற்கு வலை வீசி உள்ளது. தற்போது அஜித் 226 கோடிகள் சம்பளம் கேட்கிறாராம். விஜய் 225 கோடிகள் வாங்குவதால் அவரை விட ஒரு கோடி அதிகம் வாங்கியே ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார். இவ்வளவும் அவர் நடித்து கொண்டிருக்கும் போதே நடக்க வேண்டுமாம்.
2026 எலக்சனை வைத்துரெட் ஜெயன்ட் நிறுவனமும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும் அஜித் குட்வில் புக்கில் இடம் பெற்றிருக்கும் விஷ்ணுவர்தன் இதற்கு பாலமாய் இருக்கிறார். 5 வருடம் காத்திருந்தாலும் இப்பொழுது அதற்கு தகுந்த பலன் இவருக்கு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகப் போகிறது.