திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உதயநிதிக்கு கிடைத்த மூன்றாவது கை.. புகழ் பாடும் விஷாலையே ஓரங்கட்டி பேச வைத்த இந்தியன் 2

Indian 2: உதயநிதி தலையெடுத்த பிறகு சினிமா துறை செல்வ செழிப்பாக இருந்து வருகிறது. கணக்கு வழக்குகளை எல்லாம் பக்கா ஸ்கெட்ச் போட்டு அனைவருக்கும் லாபம் கிடைக்கும் படி ஒரு நடுநிலையோடு செயல்பட்டு வருகிறார். இதனால் பலர் பயனடைந்து அவர் பக்கம் நிற்கிறார்கள்

உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் பொறுப்புகளை எல்லாம் அவரது மனைவி கிருத்திகா கவனித்து வருகிறார். படங்களை வாங்கி விநியோகம் செய்யும் ரெட் லைட் மூவிஸ் மூலம் நிறைய விநியோகஸ்தர்கள் பயனடைகிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே உதயநிதியுடன் நட்பு பாராட்டி வந்தவர் நடிகர் விஷால். மேடையில் உதயநிதி ஒரு அரசியல் பெரும்புள்ளி என்பதை கூட மறந்து, விஷால் உதயநிதியை, வாடா போடா என்று தான் கூப்பிடுவார். மூச்சுக்கு 300 தடவை என் நண்பர், என் அங்கிள் என உதயநிதியையும்,ஸ்டாலினையும் அழைப்பார்.

ஏற்கனவே விஷாலுக்கு நடிகர்களாகிய நந்தா, ரமணா என இரு நண்பர்கள் உண்டு. இவர்கள்தான் விஷாலுக்கு வலது மற்றும் இடது கரமாக செயல்பட்டு வந்தனர். இவர்கள் விஷாலை வைத்து இவர்களது தயாரிப்பு நிறுவனமாகிய “ராணா மூலம் லத்தி என்ற படத்தை தயாரித்தனர்.

புகழ் பாடும் விஷாலையே ஓரங்கட்டி பேச வைத்த இந்தியன் 2

அந்த படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இப்பொழுது விஷாலையும் மிஞ்சும் அளவிற்கு இந்தியன் 2 ஆடியோ விழாவில் கமல்ஹாசனின் பேச்சு இருந்தது. பல பிரச்சனைகள் வந்த இந்தியன் 2 படத்தின் எல்லா கஷ்டங்களையும் தீர்த்து வைத்தது உதயநிதி ஸ்டாலின் தான் என்று கமல் பேசினார்

மேலும் கமலஹாசன், உதயநிதி ஸ்டாலினுக்காக நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். அவருக்காக பணியாற்ற துடிக்கிறேன் என அரசியல் ரீதியாக இந்தியன் 2 ஆடியோ லாஞ்சில் பேசியிருந்தார். இதைவிட ஒரு படி மேலே சென்ற உலகநாயகன், ஒரு தமிழன் பிரதமராக கூடாத என்று கூட புகழ் பாராட்டி, உதயநிதிக்காக செயல்படும் மூன்றாவது கை நான் என்பதை காட்டினார்.

Trending News