தீபாவளி ரேசில் கலை கட்டும் 4 படங்கள்.. உதயநிதிக்கு வந்த கடும் நெருக்கடி

தீபாவளி, பொங்கல் என பண்டிகைகள் வந்துவிட்டால் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு பஞ்சம் இருக்காது. 2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி வருகிறது. இது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதனால் வரிசையாக விடுமுறை நாட்கள் என வசதியாக அமைந்துள்ளது.

இந்த நான்கு விடுமுறை நாட்களில் படங்களை ரிலீஸ் செய்து வசூல் வேட்டை ஆடிடலாம் என இந்த முறை நான்கு படங்கள் வெளியாக உள்ளது. மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் போட்டி போட உள்ளது. அதிகாரபூர்வமாக அறிவித்த நான்கு படங்களின் தொகுப்ப, .

கங்குவா: சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் போய்க்கொண்டே இருக்கிறது. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

விடாமுயற்சி: பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த படமும் தீபாவளி ரேசில் கலந்து கொள்கிறது. லைக்கா எப்படியாவது இதை தீபாவளிக்கு வியாபாரம் செய்து விடலாம் என்ற முனைப்பில் இறங்கி உள்ளது. இந்த படத்தை நெட்லிக்ஸ் ஓ டி டி தளம் வாங்கியுள்ளது.

அமரன்: ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். ராணுவ மேஜர் முகுத் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படம்.

உதயநிதிக்கு வந்த கடும் நெருக்கடி

பிரதர்: சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற காமெடிக்கு பெயர் போன படங்களை இயக்கியவர் ராஜேஷ். இவர் ஜெயம் ரவியை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் முழுக்க முழுக்க காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி

ஒரே நாளில் நான்கு படங்கள் ரிலீஸ் ஆவதால் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கங்குவா, விடா முயற்சி போன்ற படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதில் பிரச்சனை உருவாகி வருகிறது. இதில் மேலும் சங்கடமாக சிவகார்த்திகேயனும் களத்தில் இறங்குகிறார்

- Advertisement -spot_img

Trending News