அபார நம்பிக்கையால் இந்தியன் 2 படத்தை நம்பி மோசம் போனது ரெட் ஜெயன்ட் மூவிஸ். இந்த நிறுவனம் தான் தமிழ்நாடு தியேட்டரிக்கல் ரைட்சை வாங்கி ரிலீஸ் செய்தது. கிட்டத்தட்ட 55 கோடிகள் அட்வான்ஸ் புகையைப் பெற்று இந்த படத்தை தியேட்டர் உரிமையாளர்களுக்கு விநியோகம் செய்துள்ளார்கள்.
இந்தியன் 2 படத்தை இரண்டு வாரங்கள் தியேட்டரில் இருந்து எடுக்கக் கூடாது என்பதுதான் முதல் அக்ரீமெண்ட். இப்பொழுது வேறு எந்த படமும் ரிலீஸ் ஆகாத காரணத்தினால் இந்த படத்தை செய்வதறியாது தியேட்டர்கள் ஓட்டி வருகிறது. இதனால் தியேட்டர்களுக்கு பெரும் நஷ்டம் தான்.
வாங்கிய அட்வான்ஸ் தொகையில் இருந்து கிட்டத்தட்ட 30 கோடிகள் திருப்பிக் கொடுக்கும் நிலையில் தான் இந்த படத்திற்கு வசூல் கிடைத்துள்ளது. பொதுவாக விநியோகஸ்தர்கள் எல்லோரும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் அடுத்த படத்தில் தான் இதை அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள்.
ராயன் படம் மூலம் வைத்த பொரி
ஆனால் தற்சமயம் இதற்கு உதயநிதி ஆப்பு வைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் அடுத்து வெளியிடும் படம் தனுஷின் ராயன். இந்த படம் ஜூலை 26 ஆம் தேதி அன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளது..அதனால் தியேட்டர் உரிமையாளர்கள் எல்லோரும் ராயன் படத்தில் இந்தியன் 2 வசூலை சரி செய்யலாம் என்று எண்ணி இருந்தார்கள்.
உதயநிதி தரப்போ இந்த படம் நாங்கள் ரிலீஸ் செய்து விடுவோம் , வரவு செலவு கணக்கை நேராக சன் டிவிக்கு அனுப்பி விடுங்கள் என கூறிவிட்டாராம். இதனால் அதிர்ச்சியில் உள்ளார்கள் விநியோகஸ்தர்கள். இந்தியன் 2 படத்திற்கான அட்வான்ஸ் தொகையை ராயன் படத்தில் ஈடு கட்ட முடியாமல் திணறி வருகின்றனர்.