உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தற்போது தமிழ் சினிமாவில் ஆணித்தரமான அடிதளம் போட்டுள்ளது. அதாவது டாப் நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை இந்நிறுவனம் தான் விநியோகம் செய்கிறது. அதாவது ஆரம்பத்தில் ரெட் ஜெயன்ட் படத்தை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தது.
ஆனால் இப்போது விநியோகம் செய்வதில் தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏனென்றால் எந்த முதலீடு இல்லாமல் விநியோகம் செய்வதன் மூலம் ஷேர் கிடைக்கிறது. இதனால் நல்ல வருவாய் பார்த்து வருவதால் ரெட் ஜெயன்ட் நிறைய படங்களை வெளியிட்டு வருகிறது. கடந்தாண்டு விக்ரம், பொன்னியின் செல்வன் படங்கள் மூலம் பெத்த லாபம் பார்த்தது.
2023 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே முதல் மூன்று மாதங்களில் ஹாட்ரிக் வெற்றியை ரெட் ஜெயன்ட பெற்றுள்ளது. அந்த வகையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு படம் வெளியாகி இருந்தது. வெளிநாடுகளில் வாரிசு படம் நல்ல வசூலை பெற்றாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் துணிவு படம் தான் வசூல் வேட்டை ஆடியது.
இதைத்தொடர்ந்து பிக்பாஸ் கவின் நடிப்பில் டாடா படம் வெளியாகி இருந்தது. இப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டாடா படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் பட்டையை கிளப்பியது.
டாடா படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படமும் ரெட் ஜெயன்ட் கைவசம் தான் இருந்தது. சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ மற்றும் பலர் நடிப்பில் விடுதலை படம் உருவாகி இருந்தது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வரும் நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்க உள்ளது. இந்த மூன்று படங்களின் மூலம் மூன்றே மாதத்தில் ரெட் ஜெயன்ட் தனது கல்லாவை நிரப்பி உள்ளது. அடுத்தடுத்து இந்நிறுவனம் கைவசம் இந்தியன் 2, பொன்னியின் செல்வன் 2 போன்ற பிரம்மாண்ட படங்களும் உள்ளது.