வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சினிமாவுக்கு எண்ட் கார்டு போட்ட உதயநிதி.. இதுதான் கடைசி படம்

அரசியலில் கால்பதிப்பதற்கு சினிமா ஒரு ஊன்றுகோலாக உள்ளது. ஆனால் அரசியல் குடும்பத்திலிருந்து சினிமாவிற்கு வந்தவர் உதயநிதி ஸ்டாலின். ஆரம்பத்தில் சந்தானத்துடன் இவர் இணைந்து நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு தனக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதால் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வந்தார்.

இதை தொடர்ந்து ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரிக்க தொடங்கினார். தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களின் தமிழ்நாட்டு உரிமையை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தான் கைப்பற்றியுள்ளது. சினிமாவில் இவ்வாறு நடிப்பு, தயாரிப்பு என இரண்டிலும் தன் ஆதிக்கத்தை உதயநிதி செலுத்தி வருகிறார்.

தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி படம் விரைவில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற படத்தில் நடிக்கயுள்ளார். இப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் உதயநிதி சினிமாவை போலவே அரசியலிலும் தனது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதாவது திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராகவும், எம்எல்ஏவாக உள்ள உதயநிதி பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுவருகிறார். மேலும் மக்களுக்கு பல நன்மைகள் செய்து வருகிறார்.

இதனால் தற்போது சினிமாவிற்கான நேரத்தை அவரால் ஒதுக்க முடியவில்லை. மேலும் கூடிய விரைவில் உதயநிதிக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்படும் என பேசப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஊடகமொன்றுக்கு உதயநிதி பேட்டி அளித்துள்ளார். அதாவது மாமன்னன் படம்தான் தனக்கு கடைசி படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

அதாவது 100% முழுவதுமாக அரசியலில் ஈடுபட உள்ளேன். மேலும் அரசியலைப் பற்றியும் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி முழு கவனத்துடன் அரசியலில் செயல்பட உள்ளதாக உதயநிதி கூறியுள்ளார். இது அவரது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News